பாகிஸ்தானுக்கு எதிரான ஃபைனல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.


டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் விளையாடினர். அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. 


138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.  முன்னதாக, பீல்டிங் செய்தபோது அனைத்து இங்கிலாந்து வீர்ரகளும் கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடினர்.  


காரணம் இதுதான்..


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கடவுள் என்றழைக்கப்படும் டேவிட் இங்கிலிஷ் நேறறு காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்து நோக்கில் இங்கிலாந்து வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடினர். பேட்டிங்கின்போதும் இங்கிலாந்து வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்தபடியே விளையாடினர்.


யார் இந்த டேவிட் இங்கிலிஷ்?
டேவிட் இங்கிலிஷ் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். அதுமட்டுமல்லாமல் நடிகர், எழுத்தாளர், தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுபவர் என பன்முகத்தன்மையைக் கொண்டவர். இவர் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 76. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இங்கிலாந்து வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.


ஜாஸ் பட்லர் இரங்கல்
டேவிட் இங்கிலிஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரது அற்புதமான பன்பரி திருவிழாக்கள் மூலம் சில சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கினார். அவருடன் நேரத்தை செலவிடுவது மிகவும் வேடிக்கையாக இருக்கும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் இரங்கல் தெரிவித்தார். மேலும் பல கிரிக்கெட் பிரபலங்களும் டேவிட் இங்கிலிஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.







முன்னதாக, கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.


PAK vs ENG T20 WC Final LIVE: பதிலுக்கு பதில்... பக்காவாக ஸ்கெட்ச் போடும் பாகிஸ்தான்.. பரிதவிக்கும் இங்கிலாந்து...!


பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் தோல்வியுடன் தொடங்கியது. அதன் பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பெற்றது. தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கடந்த 1992ம் ஆண்டு இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றியது.


பாகிஸ்தான் அணியை போலவே இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் ஒரு வீரர் சொதப்பினாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பெற்று தருகின்றனர். இதன் காரணமாகவே இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது.