இந்த டி20 உலகக் கோப்பையில் சில சிறந்த தனிப்பட்ட வீரரின் செயல்பாடுகளை பார்த்தோம், அவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. மேலும் அந்தந்த அணிகள் போட்டியில் முன்னேறி செல்லவும் உதவியது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பட்டத்துக்காகப் போட்டியிடவுள்ள இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இந்த உலகக் கோப்பையில் மிளிர்ந்த பல வீரர்களைக் கொண்டிருக்கின்றன.


இந்த இறுதிப்போட்டி மோதலுக்கு முன்னதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் அவரது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் இந்த தொடருக்கான வீரரை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும், மிகவும் வியக்கத்தக்க வகையில், அவர்களின் மனதில் மிகத் தெளிவாக அவர்களை கவர்ந்த வீரரின் பெயரைக் கூறினர். இந்தியாவின் சூர்யகுமார் யாதவை கூறிய பட்லர், இந்த தொடரில் அவர் சுதந்திரமாக பேட்டிங் செய்த விதம் கண்ணைக் கவரும் வகையில் இருந்தது என்று கூறினார்.



பட்லர் தேர்வு செய்த வீரர்


"சூர்யகுமார் யாதவ் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் அதீத சுதந்திரத்துடன் விளையாடியவர் என்று நான் நினைக்கிறேன். அணி முழுவதும் நட்சத்திரங்கள் நிறைந்த வரிசையில் அவர் நம்பமுடியாத அளவிற்கு கண்களைக் கவர்ந்துள்ளார். அவர் விளையாடிய விதம் ஆச்சரியமாக இருக்கிறது", என்றார். சூர்யகுமார் யாதவ் ஆறு போட்டிகளில் ஆடி 239 ரன்கள் எடுத்தார். இந்த ரன்கள் அனைத்தும் பரபரப்பான ஸ்ட்ரைக் ரேட் 189.68 இல் வந்தது. களத்திற்கு வந்ததும் பேட்டை சுழற்றி பந்தை பவுண்டரிக்கு வெளியே துவதுவதிலேயே குறியாக இருந்தார், பொறுமை என்ற ஒன்று அவர் இலக்கணத்திலேயே இல்லை. 


தொடர்புடைய செய்திகள்: Surya Sister : "ஜோதிகா அண்ணிதான் எனக்கு வழிகாட்டி.." பாராட்டு மழை பொழியும் சூர்யா, கார்த்தி தங்கை..!


சாம் கரன் & அலெக்ஸ் ஹேல்ஸ்


அதிரடியாக ஆடிய அவர் நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக வந்த மூன்று அரை சதங்களையும் அடித்தார். உலகக்கோப்பை போன்ற பெரிய மேடையில் தனது திறமையை காட்டியதில் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார். அதோடு ICC ஆண்கள் T20I பேட்ஸ்மேன் தரவரிசையில் உலகின் நம்பர்.1 ஆனார். தொடர்நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒன்பது வீரர்களில் ஒருவரான பட்லர், சாம் கர்ரன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பேசினார். "நிச்சயமாக அந்த லிஸ்டில் எங்கள் தோழர்களும் உள்ளனர் - சாம் கர்ரன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ். அவர்கள் இறுதிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், கண்டிப்பாக கோப்பையை வெல்ல முடியும்," என்று பட்லர் மேலும் கூறினார். 



பாபர் அசாம் யாரைக் கூறினார்?


பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சக வீரர் ஷதாப் கானுடன் சென்றார். "அவர் விளையாடும் விதத்திற்கு ஷதாப்கான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று பாபர் கூறினார். "அவரது பந்துவீச்சு எப்போதும் போல சிறப்பாக இருந்தபோதிலும், அவரது பேட்டிங்கும் சற்று மேம்பட்டது. கடந்த மூன்று ஆட்டங்களில் அவரது சிறந்த பீல்டிங்கும் வெளிப்பட்டுள்ளது. இதனால் களத்தில் அவரது ஆதிக்கம் பெரிதாக தெரிகிறது", என்றார்.


சிட்னியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தான் கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியின் போது பேட்டிங்கில் ஷதாப்பின் முக்கிய பங்களிப்பு அணிக்கு பெரிதாக உதவியது, அதில் அவர் ஒரு அபாரமான அரை சதம் அடித்தார். அதோடு அவர் ஆறு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 3/22 என்று சிறந்த எண்ணிக்கையும் கொண்டுள்ளார். அதிக ரன்களும் விட்டுக்கொடுக்கவில்லை, 6.59 என்ற எகனாமியில் பந்து வீசுவது அணிக்கு பெரிதாகி உதவுகிறது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷதாப் கான் தவிர, இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் சாம் குர்ரான், பாகிஸ்தானின் ஷதாப் கான், ஷஹீன் ஷா அப்ரிடி, ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா மற்றும் இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஆகியோர் தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மற்ற வீரர்கள் ஆவார்கள்.