நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மொத்தம் 9 லீக் போட்டிகள் விளையாடியது. இதில், 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகளை கடந்து 6வது இடத்தில் இருந்தது.


இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனிடையே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாத ஆப்கானிஸ்தான் அணி லீக் போட்டிகளை முடித்துகொண்டு தாய் நாடு கிளம்பியது.


முதுகில் காயம்:


இதனிடையே, ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ரசித் கானுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவர் ஓய்வு எடுத்து வந்தார். இச்சூழலில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தினர்.


இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.





அதேபோல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் லீக் தொடரான பிபிஎல் போட்டியிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது.


அனைவருக்கும் நன்றி:



இந்நிலையில்தான் ரசித் கானுக்கு இன்று முதுகில் அறுவை சிகிச்சை மோற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, அவர் அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 23) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது. இப்போது குணமடையும் சூழலில் இருக்கிறேன். மீண்டும் களத்தில் இறங்க என்னால் காத்திருக்க முடியாது”என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ரசித் கான். 


 


மேலும் படிக்க: Josh Inglis: இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டி... ஜோஸ் இங்கிலிஸ் அதிரடி... சதம் அடித்து அசத்தினார்!


 


மேலும் படிக்க: Indian Captains Record in ODI Finals: அசாருதீன் முதல் ரோகித் வரை! இறுதிப்போட்டிகளில் அதிக வெற்றி பெற்றுத்தந்த கேப்டன்கள்!