சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஐ.சி.சி. நடத்தும் முக்கிய தொடர்களில் இந்திய அணி கேப்டன்களின் இறுதிப்போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டன்கள் என்ற பெருமையை அசாருதீன் மற்றும் தோனி ஆகியோர் பெற்றுள்ளனர்.


ரோகித் சர்மாவுக்கு பாராட்டு:


நடப்பு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடைபெற்றது. இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கான அனைத்து சூழல்களும் இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதாகவே கருதப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் தாங்கள் விளையாடிய 10 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று இந்திய ரசிகர்களுக்கு மேலும் நம்பிக்கையை கொடுத்தனர்.


இந்த சூழ்நிலையில் தான் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. கேப்பையையும் தவறவிட்டது. இது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியை சிறப்பாக கேப்டன்ஷிப்பில் அழைத்துச் சென்ற ரோகித் சர்மாவை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.


நாக் அவுட் போட்டிகள்:


இந்நிலையில், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கேப்டன்களின் நாக் அவுட் போட்டிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மேலும், நாக் அவுட் போட்டிகளில் அதிக முறை வெற்றியை பெற்றுத் தந்த கேப்டன்கள் யார் என்பதையும் பார்ப்போம்:


கடந்த 1990 ஆம் ஆண்டுமுதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டன்களாக, மொத்தம் எட்டு வீரர்கள் அணியை வழிநடத்தியுள்ளனர்.


முகமது அசாருதீன்:


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 1990 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மொத்தம் 19 நாக் அவுட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.


சவுரவ் கங்குலி:


சவுராவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 2000 முதல் 2005 வரை மொத்தம் 14 நாக் அவுட் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில்,  1 வெற்றியை மட்டுமே பெற்று 10 தோல்விகளை பார்த்துள்ளது. 3 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.


எம்.எஸ்.தோனி:


எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 11 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில், 7 வெற்றிகளையும் , 4 தோல்விகளைம் நாக் அவுட் போட்டிகளில் சந்தித்துள்ளது. முன்னதாக, நாக் அவுட் போட்டிகளில் அதிக வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத்தந்துள்ள கேப்டன்களில் முகமது அசாருதீனுக்கு அடுத்த படியாக தோனி தான் இருக்கிறார்.



சச்சின் டெண்டுல்கர்:


சச்சின் டெண்டுல்கர் 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை 6 நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். இதில், 1 வெற்றியையும், 3 தோல்விகளையும் இந்திய அணி சந்தித்துள்ளது. 2 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.



ராகுல் ட்ராவிட்:


ராகுல் ட்ராவிட் 2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை 2 நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். இதில், 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.



அஜய் ஜடேஜா:


1999 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அஜய் ஜடேஜா தலைமையிலான இந்திய அணி 2 நாக் அவுட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்த 2 போட்டிகளிலுமே தோல்வியைத் தான் சந்தித்துள்ளது.


விராட் கோலி:


விராட் கோலி தலைமையில் இந்திய அணி 2017 ஆம் ஆண்டில் 1 நாக் அவுட் போட்டியை சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளது. இந்த ஒரு போட்டியிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.


ரோகித் சர்மா:


2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மொத்தம் 3 நாக் அவுட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில், 2 வெற்றியையும் 1 தோல்வியையும் சந்தித்துள்ளது.