ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கியது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த உலகக் கோப்பை தொடர் நவம்பர் 19 ஆம் தேதி முடிவடைகிறது.
சிறந்த பீல்டருக்கான விருது:
ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் சிறந்த பீல்டருக்கான விருதை வழங்கி ஐ.சி.சி வீரர்களை கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் சிறந்த பீல்டருக்கான விருதை விராட் கோலி பெற்றார்.
இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறந்த பீல்டருக்கான விருதை ஷர்தூல் தாக்கூர் பெற்றார்.
கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் சிறந்த பீல்டர் விருதை தட்டிச்சென்றார்.
வங்கதேச அணிக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த போட்டியில் சிறந்த பீல்டர் விருதை ஜடேஜா பெற்றார்.
இரண்டு முறை விருதை வென்ற ஷ்ரேயாஸ்- ராகுல்:
தனது 5-வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இந்த போட்டி கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிரந்த பீல்டருக்கான விருதை ஷ்ரேயாஸ் பெற்றார்.
அதேபோல், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சிறந்த பீல்டர் விருதை கே.எல்.ராகுலும், நேற்று (நவம்பர் 2) இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஷ்ரேயாஸும் பெற்றனர். மேலும், இந்த விருதை கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஆகியோர் இரண்டு முறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: World Cup 2023 Stats: ரன் வேட்டையில் முன்னேறிய விராட், விக்கெட் அடிப்படையில் மதுஷங்க.. டாப் 10 புள்ளி விவரங்கள்!
மேலும் படிக்க: Team India Records: உச்சகட்ட ஃபார்மில் ஷமி - கோலி டூ ரோகித்.. உலகக் கோப்பையில் இந்தியா கொட்டிக் குவித்த சாதனைகள்