கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரராக அறியப்பட்டவர் ரோஹித் சர்மா. அப்படிப்பட்ட இவரை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி தேர்வு செய்யவில்லை. அது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


அந்த நேரத்தில் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரோஹித் சர்மாவை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்று கேள்வியும் எழுப்பினர்.


அதேநேரம் அடுத்தடுத்த உலகக்கோப்பைகளில் தன்னுடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்து முடித்தார். அதிலும், குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோபையில் ஐந்து சதங்கள் அடித்து அனைவரின் பார்வையையும் தன்பக்கம் திருப்பினார்.


இச்சூழலில், தற்போது நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் தான் இந்திய அணி களம் காண இருக்கிறது. இதனிடையே, இவர் தலைமையிலான இந்திய அணி எப்படியும் கோப்பையை வென்று விடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் பற்றியும் கேப்டன்ஷி பற்றியும் ரோஹித் சர்மா பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ கேப்டன்ஷி என்பது ஒரு வீரர் உச்சத்தில் இருக்கும் போது வழங்கப்பட வேண்டும். ஒரு கிரிக்கெட்டர் 27 அல்லது 28 வயதில் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பார்” என்றார்.


நினைப்பது எல்லாம் நடக்காது


தொடர்ந்து பேசிய அவர், “நாம் நினைப்பது எல்லாம் இங்கு உடனடியாக நடக்காது.  இந்திய அணியின் ஜாம்பவான்கள் பலருக்கு அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை. அதனால் தனக்கான வாய்ப்புக்காக காத்திருப்பதுதான் சரியானது. 


ஏனென்றால் எனக்கு முன்பாக இங்கு இந்திய அணியை வழிநடத்தியது எம்.எஸ்.தோனியும் , விராட் கோலியும்தான் . அவர்கள் ஒன்றும் சாதாரண வீரர்கள் கிடையாது. அவர்கள் எப்படிப்பட்ட வீரர்கள் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அதே நேரம் முன்னணி வீரர்களாக இருந்த கம்பீர், சேவாக்  ஆகியோருக்கு எல்லாம் கேப்டனாகும் வாய்ப்பே கிடைக்கவில்லை. 


இதுதான் வாழ்க்கை


யுவராஜ் சிங் எவ்வளவு சிறந்த வீரர் அவருக்கும் இந்திய அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்பே கிடைக்க வில்லை. அவர் கேப்டனாகி இந்திய அணியை வழிநடத்தி இருக்க வேண்டும். ஆனால் கடைசி வரையிலும் அவருக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. 


இதுதான் வாழ்க்கை. அந்த வாய்ப்பு எனக்கு தற்போது கிடைத்துள்ளது. அதை எண்ணி நான் பெருமை அடைகிறேன். அணியை எப்படி வழிநடத்துவது என்பது தெரிந்த பின்னரே அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றது” என்று பேசியுள்ளார்.


 


மேலும் படிக்க: Udayanithi Stalin: 'தங்கம் வென்ற நீரஜ், வெள்ளி வென்ற கிஷோர்' வாழ்த்து தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


 


மேலும் படிக்க: ODI World Cup 2023: பந்தயத்துக்கு நாங்க ரெடி; உலகக்கோப்பையை ரவுண்டு கட்டிய கேப்டன்கள்; பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம் வைரல்