நாளை முதல் இந்தியாவில் தொடங்கவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் திருவிழாவிற்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்துக்கொண்டு உள்ளது. இந்நிலையில் இன்று கேப்டன்கள் தினம் பிசிசிஐ மற்றும் ஐசிசி-ஆல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது இந்த தொடரில் களமிறங்கவுள்ள 10 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டனர். மேலும் உலகக்கோப்பையுடன் 10 கேப்டன்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த கேப்டன்கள் தினத்தின்போது, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேச அணிகளின் 10 கேப்டன்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தலையினை கீழே பார்த்தவாறு அமர்ந்திர்ந்தார். ஆனால் இது இணையத்தில் அவர் தூங்கி வழிந்தார் என பரவவே அது வைரலானது. 


இந்த உலகக்கோப்பையைப் பொறுத்தவரையில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக  களமிறங்க வாய்ப்பில்லை என ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. 


ஐசிசி உலகக் கோப்பையில் போட்டிகள் எந்த தேதியில் யார் யாருக்கு?



  • அக்டோபர் 5: இங்கிலாந்து vs நியூசிலாந்து - அகமதாபாத்

  • அக்டோபர் 6: பாகிஸ்தான் vs நெதர்லாந்து - ஹைதராபாத்

  • அக்டோபர் 7: பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் - தர்மசாலா

  • அக்டோபர் 7: தென்னாப்பிரிக்கா vs இலங்கை - டெல்லி

  • அக்டோபர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா- சென்னை

  • அக்டோபர் 9: நியூசிலாந்து vs நெதர்லாந்து - ஹைதராபாத்

  • அக்டோபர் 10: இங்கிலாந்து vs பங்களாதேஷ்-தர்மசாலா

  • அக்டோபர் 10: பாகிஸ்தான் vs இலங்கை- ஹைதராபாத்

  • அக்டோபர் 11: இந்தியா vs ஆப்கானிஸ்தான்- டெல்லி

  • அக்டோபர் 12: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா- லக்னோ

  • அக்டோபர் 13: நியூசிலாந்து vs வங்கதேசம்- சென்னை

  • அக்டோபர் 14: இந்தியா vs பாகிஸ்தான்- அகமதாபாத்

  • அக்டோபர் 15: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்- டெல்லி

  • அக்டோபர் 16: ஆஸ்திரேலியா vs இலங்கை - லக்னோ

  • அக்டோபர் 17: தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து - தர்மசாலா

  • அக்டோபர் 18: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்- சென்னை

  • அக்டோபர் 19: இந்தியா vs வங்கதேசம்- புனே

  • அக்டோபர் 20: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - பெங்களூரு

  • அக்டோபர் 21: நெதர்லாந்து vs இலங்கை - லக்னோ

  • அக்டோபர் 21: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா- மும்பை

  • அக்டோபர் 22: இந்தியா vs நியூசிலாந்து - தர்மசாலா

  • அக்டோபர் 23: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்- சென்னை

  • அக்டோபர் 24: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்- மும்பை

  • அக்டோபர் 25: ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து-டெல்லி

  • அக்டோபர் 26: இங்கிலாந்து vs இலங்கை - பெங்களூரு

  • அக்டோபர் 27: பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா- சென்னை

  • அக்டோபர் 28: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து - தர்மஷாலா

  • அக்டோபர் 28: நெதர்லாந்து vs பங்களாதேஷ் - கொல்கத்தா

  • அக்டோபர் 29: இந்தியா vs இங்கிலாந்து - லக்னோ

  • அக்டோபர் 30: ஆப்கானிஸ்தான் vs இலங்கை - புனே

  • அக்டோபர் 31: பாகிஸ்தான் vs பங்களாதேஷ்- கொல்கத்தா

  • நவம்பர் 1: நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா- புனே

  • நவம்பர் 2: இந்தியா vs இலங்கை - மும்பை

  • நவம்பர் 3: நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான் - லக்னோ

  • நவம்பர் 4: நியூசிலாந்து vs பாகிஸ்தான் - பெங்களூரு

  • நவம்பர் 4: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா- அகமதாபாத்

  • நவம்பர் 5: இந்தியா vs தென்னாப்பிரிக்கா - கொல்கத்தா

  • நவம்பர் 6: பங்களாதேஷ் vs இலங்கை- டெல்லி

  • நவம்பர் 7: ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - மும்பை

  • நவம்பர் 8: இங்கிலாந்து vs நெதர்லாந்து - புனே

  • நவம்பர் 9: நியூசிலாந்து vs இலங்கை - பெங்களூரு

  • நவம்பர் 10: தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்- அகமதாபாத்

  • நவம்பர் 11: ஆஸ்திரேலியா vs வங்கதேசம்- புனே

  • நவம்பர் 11: இங்கிலாந்து vs பாகிஸ்தான் - கொல்கத்தா

  • நவம்பர் 12: இந்தியா vs நெதர்லாந்து - பெங்களூரு

  • 15 நவம்பர்: அரையிறுதி 1- மும்பை

  • 16 நவம்பர்: அரையிறுதி 2- கொல்கத்தா

  • 19 நவம்பர்: இறுதி- அகமதாபாத்.