லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 29-வது லீக் போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன.
இன்று (அக்டோபர் 29) நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களம் இறங்கினார்கள்.
இதில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து சுப்மன் கில் நடையை கட்டினார். பின்னர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய விராட் கோலி 9 பந்துகள் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இது தான் அவர் உலகக் கோப்பை தொடரில் டக் அவுட் ஆகி வெளியேறுவது முதல் முறை ஆகும்.
18,000 ரன்களை கடந்த ஹிட்மேன் ரோகித்:
27 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்து தடுமாறிய இந்திய அணியை பொறுப்புடன் மீட்டார் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா. அந்த வகையில் அதிரடியாக ஆடிய அவர் இன்றைய போட்டியின் 21வது ஓவரில் அடில் ரஷித் வீசிய பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் 18,000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதேபோல், 2023ல் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையையும் தன் வசம் வைத்துள்ளார். அதன்படி, தற்போது வரை 6 போட்டிகள் விளையாடி அவர் இன்று அடித்த 3-வது சிக்ஸர் மூலம் மொத்தம் 20 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார். இதில் இரண்டாவது இடத்தில் டேவிட் வார்னர் 19 சிக்ஸர்களுடன் இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்:
தனது 24 வருட கிரிக்கெட் வரலாற்றில் 664 இன்னிங்ஸ் விளையாடி உள்ள கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் 34357 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்.
2008 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமான விராட் கோலி 513 இன்னிங்ஸ் விளையாடி 26121 ரன்கள் எடுத்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் 1996 மற்றும் 2012 வரை இந்திய அணிக்காக விளையாடிய ராகுல் ட்ராவிட் 504 இன்ங்கிஸ்கள் விளையாடி மொத்தம் 24064 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி 1992 முதல் 2008 வரை இந்தியாவுக்காக விளையாடி 18433 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஐந்தாவது இடத்தில் ரோகித் சர்மா 457 இன்னிங்ஸ் விளையாடி 18001 ரன்களை கடந்தார். அதன்படி இன்று (அக்டோபர் 29) நடைபெற்ற போட்டியில், 101 பந்துகள் களத்தில் நின்ற அவர் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸ்ர்கள் என மொத்தம் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
மேலும் படிக்க: IND vs ENG LIVE Score: மெல்ல மெல்ல மீண்டு வந்த இந்திய அணிக்கு மீண்டும் சரிவு; கேப்டன் இன்னிங்ஸ் ஆடும் ரோகித் சர்மா
மேலும் படிக்க: IND Vs ENG World Cup 2023: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா இந்தியா? இங்கிலாந்து உடன் இன்று பலப்பரீட்சை