IND vs ENG LIVE Score: இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய பந்து வீச்சு; 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!
India vs England LIVE Score, World Cup 2023: இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி தொடர்பான அனைத்து அப்டேட்களையும் அறிந்துகொள்ள தொடர்ந்து ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
இங்கிலாந்து அணி தான் களமிறங்கிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளதால், முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறும் அணியாகியுள்ளது. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பினை தவறவிடும்.
இந்திய அணி நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை களமிறங்கிய 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தினை பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் 6 விக்கெட்டுகள் க்ளீன் போல்ட் முறையில் கைப்பற்றப்பட்டவை. அதேபோல் இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.டபள்யூ முறையில் கைப்பற்றப்பட்டது. மற்ற விக்கெட்டுகளில் ஒரு விக்கெட் கீப்பர் கேட்ச் மூலமும், ஒரு விக்கெட் ஸ்டெம்பிங் மூலமும் கைப்பற்றப்பட்டது.
ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றார்.
இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை அள்ளினார். அதேபோல் புமாரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் 13 உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்கி 40 விக்கெட்டுகளை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார்.
34 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் உள்ளது.
இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் தனது விக்கெட்டினை முகமது ஷமி வீசிய 34வது ஓவரில் இழந்து வெளியேறினார். முகமது ஷமிக்கு இந்த போட்டியில் இது 4வது விக்கெட்டாகும்.
33 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டினை இழந்து 112 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற மேலும் 118 ரன்கள் தேவை.
8 விக்கெட்டினை இழந்து தோல்வியின் பிடியில் இருக்கும் இங்கிலாந்து 31வது ஓவரில் ஒரு ரன் மட்டுமே சேர்த்தது. 31 ஓவரில் முடிவில் இங்கிலாந்து 102-8.
30 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டினை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றியை நெருங்கி வருகின்றது.
இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என நம்பப்பட்ட லிவிங்ஸ்டன் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்தில் இழந்து வெளியேறினார்.
இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் தனது விக்கெட்டினை ஜடேஜா வீசிய 29வது ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்து விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் மூலம் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வரும் இங்கிலாந்து அணி 28 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீண்டு வெற்றியை தனதாக்க போராடி வருகின்றது.
இங்கிலாந்து அணி 26 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 84 ரன்கள் எடுத்துள்ளது.
24 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டினை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து பெரும் நெருக்கடியில் உள்ளது.
போட்டியின் 23.1 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி தனது விக்கெட்டினை முகமது ஷமியின் பந்தில் இழந்து வெளியேறினார்.
22 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டினை இழந்து 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டினை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டினை இழந்து 67 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீளும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
18 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டினை இழந்து 64 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து அணியினை வெற்றிக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பில் விளையாடிக் கொண்டு இருந்த ஜோஸ் பட்லர் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 10 ரன்கள் சேர்த்திருந்தார்.
15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது.
14.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்து தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி கூட்டணி 30 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் சேர்த்து தடுமாற்றத்துடனே விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 47 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இங்கிலாந்து அணிக்கு இந்த தொடர் முழுவதுமே மிகவும் மோசமான தொடக்கம் அமைந்துள்ளது. அதில் இந்தியாவுக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 40 ரன்கள் சேர்த்துள்ளது. இதையடுத்து வங்க தேசத்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களும் சேர்த்துள்ளது.
11 ஓவர்கள் பந்து வீசிய இந்திய அணி அதில் 53 பந்துகளை டாட் பந்துகளாக வீசியுள்ளது.
4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வரும் இங்கிலாந்து அணி 11 ஓவர்கள் முடிவில் 41 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகின்றது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான பென் ஸ்டோக்ஸை அட்டகாசமான முறையில் வீழ்த்தினார் முகமது ஷமி. 9.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி 39-4 என்ற நிலையில் உள்ளது.
9 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 39 ரன்கள் சேர்த்துள்ளது.
6வது ஓவரின் கடைசி 4 பந்துகள் தொடங்கி 8வது ஓவரின் கடைசி பந்து வரை இங்கிலாந்து அணி ஒரு ரன் கூட எடுக்காமல் ஒரு விக்கெட்டினை இழந்தது.
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸை 8வது ஓவரின் கடைசி பந்தில் க்ளீன் போல்ட் ஆக்கினார் முகமது ஷமி. மேலும் இந்த ஓவரை மெய்டனாகவும் வீசினார். இங்கிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் 33-3.
போட்டியின் 7வது ஓவரை வீசிய பும்ரா அதனை மெய்டனாக வீசி அசத்தியுள்ளார். இங்கிலாந்தின் தற்போதைய நிலை 33-2.
6 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 33 ரன்கள் சேர்த்து சரிவில் இருந்து மீள முயற்சி செய்து வருகின்றது.
போட்டியின் 5வது ஓவரில் பும்ரா அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் மலான் மற்றும் ரூட் ஆகியோரது விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார். 5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 30 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டினை இழந்து 229 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி 8 விக்கெட்டினை இழந்து 49 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
48 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டினை இழந்து 220 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு செல்ல தனது பங்கினை சிறப்பாக வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் தனது விக்கெட்டினை 49 ரன்களில் இழந்தார்.
46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டினை இழந்து 208 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 45.1 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து 201 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டினை இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகின்றது.
44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டினை இழந்து 194 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகின்றார்.
41.2 ஓவர்களில் இந்திய அணி தனது 7வது விக்கெட்டினை இழந்துள்ளது. ஷமி ஒரு ரன் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.
41 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டினை இழந்து 183 ரன்கள் சேர்த்துள்ளது.
40.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி தனது 6வது விக்கெட்டினை இழந்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 8 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 180 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகின்றது.
38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டினை இழந்து 171 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
37 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டினை இழந்து 165 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளனர்.
பொறுப்புடன் விளையாடி வந்த ரோகித் சர்மா சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டினை 101 பந்தில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
36 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டினை இழந்து 163 ரன்கள் சேர்த்துள்ளது.
35 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
34.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 34 ஓவர்களில் 147 ரன்கள் சேர்த்து மிகவும் நிதானமாகவே விளையாடி வருகின்றது.
33 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டினை இழந்து 145 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. அணியின் ரன்ரேட் 4.39ஆக உள்ளது.
32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 141 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
31வது ஓவரில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அந்த ஓவரில், உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் பவுண்டரியை அடித்துள்ளார். 31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டினை இழந்து 137 ரன்கள் சேர்த்துள்ளது.
இக்கட்டான சூழலில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை 58 பந்தில் 39 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார். இவரும் ரோகித் சர்மாவும் இணைந்து 111 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்தனர்.
இக்கட்டான சூழலில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை 58 பந்தில் 39 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார். இவரும் ரோகித் சர்மாவும் இணைந்து 111 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்தனர்.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் தற்போதைய ரன்ரேட் 4.37ஆக உள்ளது.
29 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 125 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
27 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 116 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளது.
25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. அணியின் ரன்ரேட் 4 ஆக உள்ளது.
இக்கட்டான நிலையில் கைகோர்த்த ரோகித் சர்மா கே.எல். ராகுல் கூட்டணி சிறப்பாக விளையாடி 78 பந்துகளில் 59 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றனர்.
24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 89 ரன்கள் சேர்த்து நிதானமான ரன் குவிப்பிலேயே ஈடுபட்டு வருகின்றது.
3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வரும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் விளையாடி வரும் ரோகித் சர்மா 66 பந்துகளில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்து விளையாடி வருகின்றார்.
போட்டியின் 23வது ஓவரை வீசிய லிவிங்ஸ்டன் அந்த ஓவரை மெய்டனாக வீசியுள்ளார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் 81-3 என்ற நிலையிலேயே உள்ளது.
22 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 81 ரன்கள் சேர்த்து நிதானமாகவே ரன்கள் சேர்த்து வருகின்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 49 ரன்கள் சேர்த்துள்ளார்.
21 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டினை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களைக் கடந்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 73 ரன்கள் சேர்த்து மிகவும் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. அணியின் தற்போதைய ரன்ரேட் 3.68ஆக உள்ளது.
18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 67 ரன்கள் சேர்த்து நிதானமாகவே ரன்கள் சேர்த்து வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டினை இழந்து 62 ரன்கள் சேர்த்து மிகவும் நிதானமாகவே ரன்கள் சேர்த்து வருகின்றது. ரோகித் சர்மா 42 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா இதுவரை 50 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸருடன் 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 55 ரன்கள் சேர்த்து மிகவும் மந்தமான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றது,
15 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகின்றது. அணியின் தற்போதைய ரன்ரேட் 3.33ஆக உள்ளது.
14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்து 50 ரன்களை எட்டும் தருவாயில் உள்ளது.
13 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டினை இழந்து 42 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டினை இழந்து 40 ரன்கள் சேர்த்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
11.5 ஓவர்களில் இந்திய அணி 40 ரன்களில் 3 விக்கெட்டினை இழந்து தத்தளித்து வருகின்றது. ஸ்ரேயஸ் ஐயர் 4 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.
ஏற்கனவே இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்து வந்த நிலையில் போட்டியின் 12வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார்.
11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 39 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 35 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
6 ஓவர்களுக்குப் பின்னர் இந்திய அணி போட்டியின் 10வது ஓவரில் பவுண்டரி விளாசியுள்ளது. இதனை ரோகித் சர்மா விளாசினார்.
போட்டியின் 9வது ஓவரை இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லி மெய்டனாக வீசியுள்ளார். இந்திய அணியின் ஸ்கோர் 31-2.
போட்டியின் 4வது ஓவரில் இருந்து 8வது ஓவர் வரை இந்தியா தரப்பில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.
8 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டினை இழந்து 31 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 28 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி டேவிட் வில்லி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
6 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டினை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த போட்டியின் 6வது ஓவரை கிறிஸ் வோக்ஸ் மெய்டனாக வீசியுள்ளார். ஏற்கனவே இந்த போட்டியில் டேவிட் வில்லி ஒரு மெய்டன் ஓவர் வீசியுள்ளார்.
ரோகித் சர்மாவின் கேட்ச் வாய்ப்பினை ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த ரூட் தவறவிட்டார்.
5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் ரன்ரேட் 5.4ஆக உள்ளது. இந்திய அணி இதுவரை இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசியுள்ளது.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளது.
கில் தனது விக்கெட்டினை இழந்த நிலையில் மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்கியுள்ளார்.
போட்டியின் 4வது ஓவரின் கடைசிப் பந்தில் சுப்மன் கில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 13 பந்தில் 9 ரன்கள் சேர்த்தார்.
19 சிக்ஸர்கள் விளாசி இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார். வார்னர் 5 போட்டிகளில் 19 சிக்ஸர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
3 வது ஓவரின் கடைசி பந்தினையும் ரோகித் சர்மா சிக்ஸருக்கு விளாசினார். இந்த ஓவர் முடிவில் இந்திய அணி 22 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் 17 ரன்கள் குவித்துள்ளார்.
போட்டியின் மூன்றாவது ஓவரில் ரோகித் சர்மா தனது இன்னிங்ஸை பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் தொடங்கியுள்ளார்.
2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணியின் முதல் ரன்னை பவுண்டரி விளாசி தொடங்கியுள்ளார் சுப்மன் கில்.
முதல் ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ரன்கள் எதுவும் எடுக்காமல் உள்ளது.
இங்கிலாந்து அணியின் முதல் ஓவரை டேவிட் வில்லி வீசி வருகின்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கியுள்ளனர்.
நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணி இதுவரை 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி தான் களமிறங்கியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(w/c), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் முதன்முறையாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டி, இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா களமிறங்கும் 100வது போட்டியாகும்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்கள் பட்டியலில், 3990 ரன்கள் உடன் சச்சின் டெண்டுல்கர் (90 இன்னிங்ஸ்களில்) முதலிடத்தில் உள்ளார். அதேநேரம், 105 இன்னிங்ஸ்களில் 3970 ரன்கள் சேர்த்து கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் கோலி 21 ரன்கள் சேர்த்தால், சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார்.
கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்து அணி தீவிரம் காட்டி வருகிறது.
விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், மீண்டும் முதலிடத்தை பெறக் கூடும்.
Background
IND Vs ENG World Cup 2023: லக்னோவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 29வது லீக் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து 6வது வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 28 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியா, கடைசி இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்தியா - இங்கிலாந்து மோதல்:
லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதுவரை விளையாடிய முதல் 5 லீக் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல், தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மறுமுனையில் 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகளுடன் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்தும், தோல்வியையே சந்திக்காத இந்திய அணி புள்ளிப்பட்டியல்ல் மீண்டும் முதலிடம் பிடிக்கவும் இன்று மல்லுக்கட்ட உள்ளன.
பலம் & பலவீனங்கள்:
உள்ளூரில் நடைபெறுகிறது என்ற கூடுதல் பலத்துடன் நடப்பு உலகக் கோப்பையில், இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி ஷமி, பவுலிங் யூனிட்டை மேலும் வலுவானதாக மாற்றியுள்ளார். பீல்டிங்கில் மட்டும் இந்திய அணி மேலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மறுமுனையில் இங்கிலாந்து அணியில் ஆகச்சிறந்த வீரர்கள் இருப்பினும், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளனர். எனவே மோசமான நினைவுகளை மறந்து, புத்துணர்ச்சியுடன் இன்று களமிறங்கினால் மட்டுமே வெற்றிக்காக போராட முடியும். அதேநேரம், இன்றைய போட்டி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான லக்னோ மைதானத்தில் நடைபெறுவது, இங்கிலாந்து அணிக்கு சிக்கலாக அமைந்துள்ளது.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 57 முறையும், இங்கிலாந்து அணி 44 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிய, 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
மைதானம் எப்படி?
லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகவே அமைந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வை செய்வது சாதகமாக அமையலாம்.
உத்தேச அணி விவரங்கள்:
இந்தியா:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் முகமது ஷமி
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ( கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட் மற்றும் கஸ் அட்கின்சன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -