கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றைய (அக்டோபர் 28) போட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நெதர்லாந்து அணியிடம் வங்கதேசம் அணி வீழ்ந்தது.
ஈடன் கார்டனில் நடந்த இந்த போட்டியில் வங்கதேச அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாகும். இந்த தோல்வியின் மூல வங்கதேச அணியின் அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறியது. 2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் இந்த மோசமான ஆட்டத்தால், ரசிகர்களால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்தினர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
செருப்பை கொண்டு தாக்கி கொண்ட வீடியோ வைரல்:
வங்கதேச கிரிக்கெட் ரசிகரான சௌமிக் சாஹோப் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதில் ஒரு வங்கதேச ரசிகர் ஒருவர், அவர் அணிந்து வந்த செருப்பை கழட்டி தன்னை தானே தாக்கி கொண்டார். தாக்கி கொள்வதற்கு முன்பாக அவர், “ வங்கதேச அணி பெரிய அணிகளிடம் தோல்வியடைவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் நெதர்லாந்திடம் எப்படி தோற்பது? ஷகிப், முஷ்பிக் இருந்தும் தோற்றது எப்படி..? ரசிகர்கள் சார்பாக நான் என்னை அறைந்துகொள்கிறேன். வங்காளதேச ரசிகர்கள் தங்கள் அணியை உற்சாகப்படுத்த அதிக அளவில் இங்கு வந்திருந்தனர். ஸ்டேடியத்தைச் சுற்றி ஓட்டல்கள் கூட இல்லை. இத்தனை பிரச்சனைகளை சந்தித்தும் ரசிகர்கள் இப்போது ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.” என்றார்.
முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 229 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதன் பிறகு 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியும் 42.2 ஓவரில் 142 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, தஞ்சீத் ஹசன் 15 ரன்களுடன், மெஹ்தி ஹசன் மிராஜ் 35 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷாகிப் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையிலும், 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நஜ்முலும் வெளியேறினர். முஷ்பிகுர் ரஹிம் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மொத்தமாக வங்கதேச அணி 42.2 ஓவர்களில் 142 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
2023 உலகக் கோப்பையின் புள்ளிகள் பட்டியலில் வங்கதேச அணி 9வது இடத்தில் உள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். நெதர்லாந்துக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் வங்கதேசம் தோல்வியடைந்துள்ளது. இப்போது அவரது அடுத்த போட்டி பாகிஸ்தானுடன்.