அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணி உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான அணி அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பலவீனம் என்ன என்பதை முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, இங்கிலாந்துடன் அரையிறுதி சுற்றில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது.


தற்போது நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர்  நடைபெற்று வருகிறது. முதல் ஒரு நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


2-ஆவது ஒரு நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. நாளை 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. 


இந்தப் போட்டியில் கோப்பையை வெல்ல இந்திய அணி இப்போதில் இருந்தே தயாராக வேண்டியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பிரைம் வீடியோவில் பேசியதாவது:


”சமீபத்தில் டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் உள்ள வீரர்களின் சராசரி வயது 31 ஆகும். அவர்கள் அனுபவ வீரர்களுடன் தான் களமிறங்க வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டுவிட்டனர். 
அப்படி பார்த்தால் இந்திய அணிக்கு மிக குறைந்த போட்டிகளே இருப்பதால் தற்போது இருந்தே திட்டங்களை வகுக்க வேண்டும்.


Ruturaj Gaikwad: 7 சிக்ஸர்களுடன் ருத்ர தாண்டவமாடிய ருதுராஜ் கெய்க்வாட் முறியடித்த சாதனைகள்..!


எனவே, வீரர்களை இப்போதே தேர்வு செய்து, அவர்களுக்கு போதிய வாய்ப்பை வழங்க வேண்டும்.
இந்தியாவுக்கு தற்போதைய பிரச்சனையே பந்துவீச்சுதான். புதிய வீரர்களை கண்டுபிடிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு நல்ல வீரர்களை கைவிடுகிறோம் என நினைக்கிறேன். நியூசிலாந்துடனான 2வது ஒருநாள் ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் விளையாடவில்லை. முகமது சிராஜ் வாய்ப்பு பெற்றார். ஆனால் ஷர்துல் தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். புவனேஸ்வர் குமார் அணியில் ஏன் இல்லை என்றே புரியவில்லை.






அவர் சிறந்து பந்துவீச்சாளர். ஆனால், அவர் அணியில் இல்லை. வைரத்தை தேடிக் கொண்டு தங்கத்தை தொலைத்து விடுகிறோம்.


World Cup 2023: உலகக்கோப்பை தொடருக்கான நேரடி தகுதி: கடைசி இடத்தை பிடிக்க போராடும் முன்னாள் சாம்பியன்ஸ்!


பவுலிங் யூனிட்டில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி என சிறப்பான வீரர்கள் இருக்கின்றனர். உம்ரான் மாலிக் போன்ற வீரரையும் தற்போது இருந்தே வாய்ப்பு கொடுத்து தயார் செய்ய வேண்டும்” என கைஃப் தெரிவித்திருந்தார்.