லண்டனைச் சேர்ந்த ஜார்வே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செய்த சேட்டை சம்பவம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


மைதானத்திற்குள் வந்த ஜார்வோ:


ஐசிசி உலகக்கோப்பை தொடரில் 5 வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு நாள் போட்டியில் உலகதரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் விளையாடி வருகின்றனர். அதனபடி போட்டி சரியாம இன்று (அக்டோபர் 8) மதியம் 2 மணிக்கு தொடங்கியது. 


அதற்கு முன்பாக 1:50 மணிக்கு இரு அணி வீரர்களும் தங்கள் நாட்டின் தேசிய கீததற்காக மைதானத்திற்குள் வந்தனர். மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் எழுந்து நிற்க தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்டது. இதற்கடுத்து வீரர்கள் களைந்து செல்லும் சமயத்தில்தான் 'ஜார்வோ' என பெயர் பொறிக்கப்பட்டிருந்த இந்திய ஜெர்ஸி அணிந்த அந்த நபர் உள்ளே நுழைந்தார். அப்போது விராட் கோலி மற்றும் சிராஜிடம் ஏதோ பேசினார். இதனிடையே அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


யார் இந்த ஜார்வே?


இங்கிலாந்தை சேர்ந்த யூடியூபர் தான் இந்த ஜார்வோ. இவர் இப்படி மைதானத்தில் நுழைவது இது முதல்முறை அல்ல. இது போன்று இவர் பல தடவை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் மைதானத்தில் நுழைந்திருக்கிறார்.


முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போது 3 வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த போது, ஜார்வே , இந்திய  அணியின் ஜெர்சி, ஹெல்மெட், பேட் உட்பட அனைதையும் அணிந்து கொண்ட படி பேட்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் நுழைந்தார். பவுன்சர்கள் அவரை வெளியேற்றிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியது.


ரசிகர்கள் ஷாக்:


அதேபோல் மற்றொரு போட்டியில் பேட்டிங்கை முடித்து விட்டு இந்திய அணி பவுலிங் செய்வதற்காக களம் இறங்கியது. அப்போதும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த படி ‘ஜார்வோ’ பில்டீங் செய்வதற்கு மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர், பந்து வீசுவதற்காக இந்திய வீரர்களிடம் பந்தை கேட்டதை பார்த்து சிராஜ் வாய் விட்டு சிரித்த வீடியோ அப்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.



இச்சூழலில் தான் ஜார்வே இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் மைதானத்திற்குள் நுழைந்தது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


மேலும் படிக்க: Kohli Catch Viral: பீல்டிங்கிலும் கிங் என நிரூபித்த கோலி.. ஒற்றைக் கேட்ச்சால் புதிய சாதனை படைத்த விராட்!


மேலும் படிக்க: ODI World Cup 2023 Points Table: நடப்பு சாம்பியனுக்கு கடைசி இடம்.. பரிதாபமான நிலையில் இங்கிலாந்து.. இந்தியாவுக்கு எந்த இடம்?