10 அணிகள் பங்கேற்றுள்ள 13 வது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பத்து நகரங்களில் நடைபெற்று வருகிறது.  48 லீக் ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் இன்றைய போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.


இந்தியா-ஆஸ்திரேலியா


அதன்படி, இந்திய அணி மோதும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் கூட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அலைமோதுகிறது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷல் ஆகியோர்  களம் இறங்கினர்.


இந்திய அணியின் சார்பில் முதல் ஓவரை முஹமது சிராஜ் வீச இரண்டாவது  ஓவரை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வீசினார். அந்த ஓவரில்  விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ்.


அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்:


இந்த கேட்ச் மூலம் உலகக்கோப்பை  ஒருநாள் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். உலகக்கோப்பையில் அவர் பிடித்திருக்கும் மொத்த கேட்ச் 15. அவருக்கு அடத்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் கும்பிளே 14 கேட்ச்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.


 






 


தற்போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை கடந்து ஆடி வருகிறது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் - லபுஷேனே நிதானமாக ஆடி வருகின்றனர்.


இந்தியாவின் விளையாடும் XI:


ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா , ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ் , ஜஸ்பிரித் பும்ரா , முகமது சிராஜ்


ஆஸ்திரேலியாவின் விளையாடும் XI:


டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல் , பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா