ஐசிசி உலகக்கோப்பை தொடரின் 5 வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


சுழலில் மிரட்டிய ஜடேஜா:


அதன்படி, இன்றைய லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி விளையாடு வருகிறது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனிடையே, இன்றைய போட்டியில் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றார்.


அதோடு இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இன்று (அக்டோபர் 8) வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், சேப்பாக்கம் மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்து இன்றைய நாள் ஜடேஜாவிற்கானது என்று கூறியிருந்தார்.


சென்னையின் செல்லபிள்ளை:


ஜடேஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி  வருகிறார். அந்த வகையில் சேப்பாக்கம் மைதானம் என்பது ஜடேஜாவிற்கு பழக்கப்பட்ட மைதானங்களில் ஒன்றாக உள்ளது. எனவே, சென்னையின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஜடேஜா சிறப்பான பந்து வீச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.


10 பந்துகளில் மூன்று விக்கெட்டுகள்:


அதன்படி, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் விக்கெட்டுக்கு பிறகு  வார்னர் மற்றும் ஸ்மித் ஜோடி 69 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்தனர்.






அதில், வார்னர் குல்தீப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து, 52 பந்தில் 41 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார்.


சேப்பாக்கத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா கையில் பந்து கிடைத்ததும், அவர் தன்னுடைய அனுபவத்தை காட்ட ஆரம்பித்தார்.  இந்த நிலையில் ஜடேஜா ஸ்மித்தை 46 ரன்களில் கிளீன் போல்ட் செய்தார். இதற்கடுத்து லபுஷேனை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் இடம் கேட்ச் கொடுக்க வைத்து 27 ரன்களில் வெளியே அனுப்பினார்.


2 ஓவர்கள் மெய்டன்:


அடுத்து வந்த அலெக்ஸ் கேரியை ரன் கணக்கை துவங்கும் முன்பே எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்க செய்து தன்னுடைய சூழலில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்படி பத்து பந்துகளில் இந்த மூன்று விக்கெட்டுகளையும் எடுத்து இருக்கிறார். மேலும், அவர் வீசிய 10 ஓவர்களி 2 ஓவர்கள் மெய்டனுடன் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, தற்போது 47 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


மேலும் படிக்க: IND vs AUS, World Cup 2023: அனல் பறக்கப்போகும் உலகக்கோப்பை போட்டி.. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்..!


மேலும் படிக்க: Kohli Catch Viral: பீல்டிங்கிலும் கிங் என நிரூபித்த கோலி.. ஒற்றைக் கேட்ச்சால் புதிய சாதனை படைத்த விராட்!