நரேந்திர மோடி மைதானம்:
உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். அதன்படி, முதல் போட்டி அங்கு தான் நடைபெற்றது. ஆனால், அன்றைய போட்டி நடைபெற்ற நாளன்று நரேந்திர மோடி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.
அதேநேரம், அனைத்து டிக்கெட்டுகளையும் விற்றுவிட்டதாக கூறிய ஐசிசி-யை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில், ”மைதனாம் வெறிச்சோடி காணப்படுகிறது. யாருக்குத் தான் டிக்கெட்டுகளை விற்றீர்கள்” என்று விமர்சனம் செய்தனர்.
மறுபுறம் குஜராத் கிரிக்கெட் சங்கம் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் போது நிச்சயம் மைதானம் நிரம்பி வழியும் என்று கூறியிருந்தது.
நீல நிறத்தில் நிரம்பி வழியும் மைதானம்:
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று (அக்டோபர் 14) நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
அதன்படி, போட்டி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். இந்த போட்டியை காண்பதற்காக ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்றிருக்கிறார்கள். இதனிடையே, மைதானம் முழுவதும் காலை முதலே நிரம்பத்தொடங்கியது.
கடந்த போட்டியின் போது கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட இந்த மைதானம் இன்றைய போட்டியில், “நீல நிறத்தில்” நிரம்பி வழிகிறது. பாகிஸ்தான் அணியின் பச்சை நிற ஜெர்சியை மைதானத்தில் காண்பதே அரிதாக இருக்கிறது. ஆனால், இந்திய ரசிகர்களால் மைதானமே தற்போது திருவிழா கோலம் பூண்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு:
இதனிடையே, அரசியல் ரீதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சில பிரச்சனைகள் இருப்பதால் இன்றைய போட்டியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்கு அகமதாபாத நகரம் முழுவதும் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல், அதிக ரசிகர்கள் கூடி இருப்பதால் மருத்துவம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 2 கோடி பார்வைகள்:
பரபரப்பான இந்த ஆட்டத்தை மைதானம் சென்று ரசிர்கள் நேரடியாக எப்படி பார்க்கிறார்களோ அதேபோல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் பார்த்து வருகின்றனர். அதன்படி தற்போது வரை சுமார் 2.2 கோடி பேர் இன்றைய போட்டியை கண்டு களித்து வருகின்றனர். இதனிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் இந்த போட்டியில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: World Cup 2023 Points Table: அணிகளுக்கு சுத்துப்போட்டு முதலிடத்தில் நியூசிலாந்து.. இந்தியா எத்தனையாவது இடம்..? புள்ளி அட்டவணை இதோ!
மேலும் படிக்க: IND vs PAK Score LIVE: பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ்.. உற்சாகத்தில் இந்தியா..!