உலகக் கோப்பை 2023 ல் நேற்றிரவு (அக்டோபர் 13) வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அற்புதமான வெற்றியை மீண்டும் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை அடித்திருந்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 43 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்து பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும். நியூசிலாந்து அணி தனது மூன்று தொடக்கப் போட்டிகளிலும் இதேபோன்ற ஒருதலைப்பட்சமான முறையில் வெற்றியை பெற்றது. இந்த வலுவான ஆட்டத்தால், 2023 உலகக் கோப்பையின் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மீதமுள்ள 9 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதன் மூலம் முதல் சுற்றில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் சுற்று அடிப்படையில் இங்கு முதலிடத்தில் இருக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். தற்போது நியூசிலாந்துடன் இணைந்து இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் 4 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

உலகக் கோப்பை 2023 புள்ளி அட்டவணை:

 தரவரிசை போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள் நிகர ரன் ரேட்
1. நியூசிலாந்து 3 3 0 6 1.604
2. தென்னாப்பிரிக்கா 2 2 0 4 2.360
3. இந்தியா 2 2 0 4 1.500
4. பாகிஸ்தான் 2 2 0 4 0.927
5. இங்கிலாந்து 2 1 1 2 0.553
6. வங்கதேசம் 2 1 1 2 -0.699
7. இலங்கை 2 0 2 0 -0.1.161
8. நெதர்லாந்து 2 0 2 0 -1.800
9. ஆஸ்திரேலியா 2 0 2 0 -1.846
10. ஆப்கானிஸ்தான் 2 0 2 0 -1.907

கடந்த 8 போட்டிகளில் முடிவு யார் பக்கம் இருந்தது..? 

உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 82 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் வங்கதேசம் 92 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 52 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆறாவது போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

ஏழாவது போட்டியில் இங்கிலாந்து அணி வங்கதேசத்தை 137 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக வீழ்த்தியது, எட்டாவது போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஒன்பதாவது போட்டி இந்தியாவின் பெயரில் இருந்தது. இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. பத்தாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதேநேரம் 11வது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குவிந்த சாதனைகள்:

இந்தியா நடத்தும் ODI உலகக் கோப்பை 2023 இல் இதுவரை பல்வேறு சாதனை மற்றும் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 10-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. ஒருநாள் உலகக் கோப்பையின் மிகப்பெரிய இலக்கை (345) பாகிஸ்தான் துரத்தியது. இந்தப் போட்டியில், உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து 8-வது வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக, பாகிஸ்தானை தொடர்ந்து 7 முறை தோற்கடித்த இந்தியாவின் பெயரில் இந்த சாதனை இருந்தது. மேலும், தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்கரம் 48 பந்துகளில் அடித்த சதம் ஒருநாள் உலகக் கோப்பையின் அதிவேக சதமாக பதிவானது.