IND vs PAK Score LIVE: இந்தியா வெற்றி; உலகக் கோப்பையில் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்; 8வது முறையாக பாகிஸ்தான் தோல்வி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் சேர்த்துள்ளது.
29 ஒவர்கள் முடிவில் இந்திய அணி இன்னும் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 21.4வது ஓவரில் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தனது விக்கெட்டினை அஃப்ரிடி வீசிய மிதவேகப் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். ரோகித் 63 பந்தில் 86 ரன்கள் சேர்த்தார்.
அதிரடியாக பவுண்டரி விளாசி வரும் இந்திய அணி 21 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 154 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 142 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 50 ரன்கள் தேவை.
பொறுப்புடன் விளையாடி வரும் ரோகித் ஸ்ரேயஸ் கூட்டணி 56 பந்தில் 51 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
போட்டியின் 18வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக ஒரு சிக்ஸர் விளாசி ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போட்டியினைக் காண மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நரேந்திர மோடி மைதானத்திற்கு வந்துள்ளார்.
14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 52 ரன்கள் சேர்த்துள்ளார்.
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா தனது அரைசதத்தினை விளாசி சிறப்பாக விளையாடி வருகிறார்.
சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா இதுவரை 35 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் விளாசி 49 ரன்கள் சேர்த்துள்ளார்.
சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 92 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 79 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 45 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி தனது விக்கெட்டினை ஹசன் அலி பந்து வீச்சில் 18 பந்தில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
ரோகித் சர்மா இதுவரை 4 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இந்திய அணி 9 ஓவர்களில் 77 ரன்கள் சேர்த்துள்ளது.
ரோகித் சர்மா இதுவரை 4 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இந்திய அணி 9 ஓவர்களில் 77 ரன்கள் சேர்த்துள்ளது.
ரோகித் சர்மா இதுவரை 4 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இந்திய அணி 9 ஓவர்களில் 77 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 63 ரன்கள் சேர்த்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 54 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது.
7வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா இந்த போட்டியின் முதல் சிக்ஸரை விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார்.
4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 31 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக பவுண்டரிகள் விளாசி வந்த கில் 11 பந்தில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் அஃப்ரிடி பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
போட்டியின் இரண்டாவது ஓவரில் மட்டும் கில் மூன்று பவுண்டரிகள் விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார்.
முதல் ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் சேர்த்துள்ளது.
கில் தான் எதிர் கொண்ட முதல் பந்தில் பவுண்டரி விளாசியுள்ளார்.
போட்டியின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டி இந்தியாவின் இன்னிங்ஸை சிறப்பாக துவக்கியுள்ளார்.
192 ரன்கள் இலக்கினை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி தனது 3வது விக்கெட்டினை 155 ரன்களில் இருந்தபோது இழந்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் அணி தனது 7 விக்கெட்டுகளை அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 191 ரன்களில் பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது.
போட்டியின் 40வது ஓவரில் பாகிஸ்தான் அணி தனது 9வது விக்கெட்டினை இழந்தது.
40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி தனது 8 விக்கெட்டினை இழந்துள்ளது. 8வது விக்கெட்டினை ஹர்திக் பாண்டியா கைப்பற்றியுள்ளார்.
போட்டியின் 34வது மற்றும் 36வது ஓவரில் பும்ரா அதிரடியாக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் கரங்களை ஓங்கவைத்துள்ளார்.
35 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டினை இழந்து 170 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிஸ்வான் தனது விக்கெட்டினை பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 49 ரன்கள் சேர்த்திருந்தார்.
போட்டியின் 33வது ஓவரினை வீசிய குல்தீப் யாதவ் அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
போட்டியின் 33வது ஓவரின் கடைசிப் பந்தில் ஃப்திகார் தனது விக்கெட்டினை குல்தீபிடம் இழந்து வெளியேறினார்.
பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சவ்த் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 10 பந்துகளில் 6 ரன்கள் சேர்த்தார்.
பாகிஸ்தான் அணி 30 ஓவர்கள் பேட்டிங் செய்து 3 விக்கெட்டினை இழந்து 156 ரன்கள் சேர்த்துள்ளது.
அரைசதம் விளாசிய பாபர் அஸாம் தனது விக்கெட்டினை முகமது சிராஜ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
ப்பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் 57 பந்துகளை எதிர்கொண்டு இந்த தொடரில் தனது முதல் அரைசதத்தினை விளாசியுள்ளார். இவர் இதுவரை 7 பவுண்டரிகள் விரட்டியுள்ளார்.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் பாகிஸ்தான் அணி 29 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த தொடரில் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டினை இழந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தற்போது 53 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி உட்பட 45 ரன்கள் சேர்த்துள்ளார்.
பாகிஸ்தான் தனது 2வது விக்கெட்டினை போட்டியின் 12.3வது ஓவரில் இழந்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் அணி விக்கெட் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடி வருகின்றது. 26 ஓவர்கள் வரை இந்திய அணியால் மேற்கொண்டு விக்கெட் வீழ்த்த முடியவில்லை. தற்போது பாகிஸ்தான் அணி 129 ரன்கள் சேர்த்துள்ளது.
25 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 125 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் பாகிஸ்தான் அணியின் பாபர் மற்றும் ரிஸ்வான் கூட்டணி இதுவரை அதாவது போட்டியின் 25வது ஓவர்கள் வரை 75 பந்தில் 52 ரன்கள் சேர்த்து இந்தியாவுக்கு சவால் அளிக்கும் ஆட்டத்தினை விளையாடிக்கொண்டு உள்ளனர்.
இதுவரை 23 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள பாகிஸ்தான் அணி இதுவரை 2 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்துள்ளது. அதில் பாகிஸ்தான் அணி 19 பவுண்டரிகள் விளாசியுள்ளது. இன்னும் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை.
பாகிஸ்தான் அணி ஓவருக்கு குறையாமல் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி விளாசி சிறப்பாக ரன் குவித்து வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் சேர்த்து பலமான நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது.
16 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா 20 ரன்களும், இமாம் 36 ரன்களும் சேர்த்த நிலையில் விக்கெட்டினை இழந்தனர். களத்தில் பாபர் அஸாம் மற்றும் ரிஸ்வான் விளையாடி வருகின்றனர்.
15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டினை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் 5.36 ஆக உள்ளது.
பாகிஸ்தான் அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியி மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல்-ஹக் தனது விக்கெட்டினை ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
பாகிஸ்தான் அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 68 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது.
10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் அப்துல்லாவின் விக்கெட்டினை இந்திய அணியின் முகமது சிராஜ் எல்.பி.டபள்யூ முறையில் கைப்பற்றி அசத்தினார்.
7 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்தியா பாகிஸ்தான் போட்டியினை ஹாட் ஸ்டார் தளத்தில் தற்போதுவரை அதிகபட்சமாக 2.2 கோடிபேர் பார்த்து ரசித்துக்கொண்டு உள்ளனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இதுவரை 3 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்துள்ளார்.
இந்த போட்டியின் முதல் மெய்டன் ஓவரை பும்ரா போட்டியின் 5வது ஓவரில் வீசியுள்ளார்.
4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்று ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி இதுவரை 2 ஓவர்கள் பந்து வீசி அதில் 4 பவுண்டரிகள் விட்டுக்கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணி தனது ரன் கணக்கை பவுண்டரியுடன் தொடங்கியுள்ளது. முதல் ஓவரில் 4 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸை அப்துல்லா மற்றும் இமாம் உல்-ஹாக் களமிறங்கியுள்ளனர்.
இந்திய அணியின் முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசுகிறார்.
டாஸ் வென்றதற்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா, “நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம், இதைவிட பெரியதாக இருக்க முடியாது, அருமையான சூழ்நிலை. நிச்சயமாக நம்மில் பலர் அசாதாரணமான ஒன்றை அனுபவிக்கப் போகிறோம். இது ஒரு நல்ல டிராக், அதிகம் மாறப்போவதில்லை, பனி ஒரு பெரிய காரணியாக இருக்கலாம் மற்றும் அதை மனதில் வைத்து, நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். நாங்கள் சிறந்தவற்றிற்காக தொடர்ந்து பாடுபட விரும்புகிறோம், அங்கு வந்து ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களின் சிறந்ததை வழங்க விரும்புகிறோம். அணியில் சூழ்நிலையை நிதானமாக வைத்திருப்பது இதுபோன்ற போட்டியில் மிக முக்கியமான விஷயம். இஷானுக்குப் பதிலாக கில் மீண்டும் வந்துள்ளார், இஷான் தவறவிட்டது துரதிர்ஷ்டவசமானது.
கடந்த ஒரு வருடமாக கில் எங்களுக்கு ஒரு சிறப்பு வீரராக இருந்து வருகிறார், குறிப்பாக இந்த மைதானத்தில் நாங்கள் அவரை திரும்ப கொண்டு வர விரும்பினோம்.” என்றார்.
அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பாக இந்தியாவின் பிரபல பாடகர்கள் மூவர் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். அரிஜித் சிங், சுக்விந்தர் சிங் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோருக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.
Background
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. 2023 உலகக் கோப்பை போட்டிக்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்துள்ளனர். முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆவல் நிலவி வருகிறது. இதனுடன், போட்டிக்கு முன் மூன்று மூத்த பாடகர்கள் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அரிஜித் சிங், ஷங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் ஆகியோர் பாட இருக்கின்றனர்.
இந்திய அணியைப் பற்றி பேசுகையில், சுப்மன் கில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டார். கில் உடற்தகுதியுடன் இருந்தால், அவர் விளையாடும் பதினொன்றில் ஒரு பகுதியாக இருப்பார். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு விளையாடும் பதினொன்றில் இடம் கொடுக்கலாம். இதனுடன், ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இடம்பிடிப்பார். இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோரும் விளையாடும் பதினொன்றில் இடம் பெறலாம். அவர்களின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், அணி கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் முக்கிய பங்கு வகிக்க முடியும் என நம்பிக்கை உள்ளது. ஷஹீன் ரோஹித் சர்மாவுக்கு அச்சுறுத்தலாக மாறலாம். பாகிஸ்தானின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது. இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆகியோர் திறக்க வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பார்வையாளர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதை உங்களுக்குச் சொல்வோம். இந்திய மூத்த பாடகர்களான அரிஜித் சிங், ஷங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பாடுவார்கள். போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் பிசிசிஐ இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான சாத்தியமான வீரர்கள் -
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன்/சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -