Watch Video: எது என் டீசர்ட்..? வாசனை வைத்து கண்டறிந்த அஷ்வின்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
ஜிம்பாப்வே எதிரான போட்டிக்கு முன்னதாக மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் செய்த ஒரு செயல் இணையத்தில் தற்போது அதிவேகமாக வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 கடைசி சுற்றில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதியது. இந்த போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் கிரெய்க் எர்வின் டாஸ் போடுவதற்காக இயன் பிஷப் பக்கத்தில் நின்றிந்தனர். அந்த நேரத்தில் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் செய்த ஒரு செயல் இணையத்தில் தற்போது அதிவேகமாக வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் 11 வினாடி பகிர்ந்த வீடியோ கிளிப்பில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரெய்க் எர்வின் டாஸ் போடுவதற்காக மைதானத்தின் நடுவே நின்று கொண்டு இருந்தனர். அப்போது இவர்கள் மீது கேமரா முழுவதும் கவனம் செலுத்தியது. டாஸின் போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இயன் பிஷப்பிடம் பேசிகொண்டு இருந்தார். அப்போது பின்னாடி நின்ற அஸ்வின் தன்னை கேமரா கவனிப்பதை அறியாமல், தரையில் இருந்து இரண்டு ஜெர்சியை எடுக்கிறார். அந்த நேரத்தில் ஒரே மாதிரியான இரண்டு ஜெர்சிகளில் தன்னுடைய ஜெர்சி எது என்று தெரியாமல் இரண்டையும் எடுத்து ஆய்வு செய்தார்.இரண்டையும் முகர்ந்து பார்த்து, தன்னுடைய ஜெர்சியை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, மற்றொன்றை கீழே எறிந்துவிட்டு வெளியேறினார். இது அத்தனையும் கேமராவில் பதிவாகியுள்ளது.
Just In




இதை எதிர்பாராதவிதமாக டிவியில் மொபைல் கேமராமூலம் பதிவு செய்த ரசிகர் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ” உங்கள் ஆடைகளை கண்டுபிடிக்க இதுவே சரியான வழி” என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
இதற்குகீழ் நகைச்சுவையாக கமெண்ட் செய்த அஷ்வின், இரண்டு ஜெர்சிகளும் ஒரே மாதிரியாக இருந்தது. நான் அடிக்கும் வாசனை திரவியத்தை வைத்து கண்டறிந்தேன் என பதிவிட்டுள்ளார்.
டி20 உலககோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. சூப்பர் 12 பிரிவில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை சுருட்டினார். அந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் 2 பிரிவு முதல் ஆட்டத்தில் வின்னிங் ஷாட் அடித்து அசத்தினார்.