இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி, அர்ஷ்தீப்பின் நோ-பால் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.


அர்ஷ்தீப் குறித்து பாலாஜி


ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஓவரில் இரண்டு வைடுகள் மற்றும் ஒரு நோ-பால் உட்பட நான்கு ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்தது குறித்து பேசியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் முதல் T20I இல் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.


மேலும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. அதில் போட்டியின் போது ஒரு அர்ஷ்தீப் தொடர்ந்து நோ-பால் மற்றும் வைடுகளை வீசினார், இதன்மூலம் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் குவித்தது. அந்த 27 ரன்கள் ஆட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.



ரன்னிங்கில் வேலை செய்ய வேண்டும்


"அர்ஷ்தீப் சிங் தனது ரன்னிங்கை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், ப்ரஷர் சூழ்நிலைகளில் அவர் நன்றாக செயல்படத் தொடங்க வேண்டும். தொடர்ந்து நோ-பால் வீசுவது ஒரு பெரிய கவலையாக உள்ளது. அவர் களத்திற்கு வெளியேயும் பந்துவீச்சு பயிற்சியாளருடன் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டி உள்ளது. அவர் வருகின்ற போட்டிகளில் நன்றாக தேர்ந்து வருவார் என்று நம்புகிறேன், ”என்று பாலாஜி ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: IND vs NZ 2nd T20: தொடரை வெல்ல தீவிரம் காட்டும் நியூசிலாந்து...! தடுக்கும் முனைப்பில் இந்தியா...! யாருக்கு வெற்றி?


மீண்டும் பேசிக்கில் இருந்து செல்ல வேண்டும்


நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக, இலங்கைக்கு எதிரான போட்டியிலும், அர்ஷ்தீப் ஒரு T20I போட்டியில் ஐந்து நோ-பால்களை வீசியது மறக்க முடியாத காயமாக இருந்தது. 23 வயது இளைஞனின் விளையாட்டில் மீண்டும் மீண்டும் நடக்கும் தவறை பாலாஜி சுட்டிக்காட்டினார், மேலும் அவர் திருத்தம் செய்யாவிட்டால் அவர் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதை எடுத்துக்காட்டினார்.



ரிதத்தை இழக்க நேரிடும்


"ஒரு ரிதம் பிரச்சினை உள்ளது, அதை அவர் தீர்க்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து மீறினால், பெரும் கவலையாக அணிக்கும் மாறும். நீங்கள் மிக விரைவாக தீர்க்க வேண்டிய ஒன்று இது. இல்லையெனில், உங்கள் நம்பிக்கையையும் உங்கள் ரிதத்தையும் உங்கள் வேகத்தையும் இழக்க நேரிடும். அது மீண்டும் மீண்டும் நடக்கிறது என்பதை உணர வேண்டும். அவருக்குத் தேவை மீண்டும் பேசிக்கில் இருந்து வேலை செய்து அவரது கால்-லேண்டிங்கில் வேலை செய்யவேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். இன்று (ஜனவரி 29-ம் தேதி) லக்னோவில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மோதும் போது, தொடரை சமன் செய்ய இந்தியா வேட்கையுடம் போராடும்.