கடந்த ஏப்ரலில் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக 2023 உலகக்கோப்பை வரை நீடிக்கும் என்று கூறப்பட்டது. இதற்காக 10% கூடுதல் தொகையும் பேசப்பட்டது. ஆனால் பைஜூஸ் நிறுவனம், பிசிசிஐ-க்கு ரூ.86.21 கோடி நிலுவை வைத்துள்ளது என்று இரு தினம் முன்பு செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லை என்று பிஜூஸ் நிறுவனமும், பிசிசிஐ-யும் தெரிவித்துள்ளன.
பைஜுஸ் பதில்
இது தொடர்பாக பைஜூஸ் செய்தித் தொடர்பாளர் பிடிஐ-யிடம் கூறும்போது, “பிசிசிஐ-உடனான எங்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவுள்ளது. ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழ்த்தாகவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் ஒப்பந்த விதிமுறைகளின்படி பிசிசிஐக்கு சேர வேண்டிய தொகை என்னவென்பதே தெரிய வரும். அதன் பிறகு தானாக அந்த தொகை பிசிசிஐ இடம் சென்று சேரும். எனவே எங்கள் பக்கத்திலிருந்து இப்போதைக்கு நிலுவை எதுவும் இல்லை", என்றார்.
பிசிசிஐ ஒப்புக்கொண்டது
பிசிசிஐ வட்டாரமும், பைஜூஸ் நிறுவனம், ஒப்பந்தத்தின்படி கடந்த நிலுவைத் தொகையை கிரிக்கெட் வாரியத்திற்கு செலுத்திவிட்டதாக ஒப்புக்கொண்டது. மேலும், கிரிக்கெட் வாரியம் பைஜூவின் வங்கி உத்தரவாதத்தை வைத்திருப்பதையும் ஒப்புக் கொண்டது. மேலும் ஊடகங்களில் தெரிவிக்கபட்டது தவறான தகவல் என்று தெரியவந்துள்ளது.
வங்கி உத்தரவாதம் எதற்கு?
பைஜூவின் தொகையை செலுத்தாமல் இருப்பது உண்மையாக இருந்தால், பிசிசிஐ வங்கி உத்தரவாதத்தை கொடுத்து பணமாக பெற்றுக்கொள்ளலாமே, அதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. முந்தைய ஒப்பந்தம் முடிந்து புதிய ஒப்பந்தம் என்பதால், இன்னும் அது கையெழுத்தாகாதால் தாமதம் ஆவதாக தகவல்கள் வந்துள்ளன. ஒப்பந்தத்தை புதுப்பிக்க இரு தரப்பினரும் எவ்வளவு ஆர்வமாக இருந்தாலும், முதலில் கையெழுத்திடாமல் பணம் செலுத்துவது எப்படி என்று நெருங்கிய வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பிசிசிஐ அதிகாரப்பூர்வ பதில் அளிக்க வேண்டும்
என்னதான் இந்த செய்தி வதந்தியாக இருந்தாலும், இதனால் ஏற்பட்டுள்ள சலசலப்பிற்கு பைஜுஸ் அதிகாரப்பூர்வமாக பதிலளித்ததுபோல, பிசிசிஐ-யும் பதிலளிப்பதே பார்ட்னராக இருக்கும் பைஜுஸ் உடனான தொடர்பை நல்ல முறையில் கொண்டு செல்லும் என்று டராக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்