இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் தீபக்ஹூடா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சுழற்பந்துவீச்சில் அசத்தினார். இன்றைய போட்டியில் தீபக் ஹூடா அணிந்திருந்த ஜெர்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக உளளது.




அதாவது, ஒவ்வொரு வீரரும் தான் பெயர் பொறித்த ஜெர்சியையும், அதன்கீழ் அவர்களுக்கான எண்ணையும் அணிந்திருப்பது வழக்கமான ஒன்று ஆகும். இந்த போட்டியில் தீபக் ஹூடா அணிந்திருந்த ஜெர்சியின் பின்புறம் இருந்த பெயர் டேப் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது. ஆனால், எண் மட்டும் ஜெர்சியில் இருந்தது. 24ம் எண் பொறிக்கப்பட்டிருந்த அந்த ஜெர்சி யாருடையது என்று சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது.






டுவிட்டரில் பலரும் தீபக் ஹூடாவின் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இந்த ஜெர்சி யாருடையது? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.





சிலர் குருணல் பாண்ட்யா என்றும், சிலர் பிரசித் கிருஷ்ணா என்றும் பதிலளித்திருந்தனர்.





உண்மையில் இந்திய அணிக்காக ஆடும்போது குருணல் பாண்ட்யாவும், பிரசித் கிருஷ்ணாவும் 24ம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து ஆடியுள்ளனர். இந்த போட்டியில் தீபக் ஹூடா அணிந்து ஆடிய ஜெர்சி பிரசித்கிருஷ்ணாவின் ஜெர்சி ஆகும். 




இதனால், வழக்கமாக தீபக் ஹூடா அணிந்து ஆடும் ஜெர்சிக்கு என்ன ஆனது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 24ம் எண் கொண்ட ஜெர்சியை இந்திய அணிக்காக தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமாகிய கங்குலியும் அணிந்து ஆடியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண