இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை அபாரமாக வென்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இன்னொரு புறம், பிசிசிஐ மீது கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். காரணம், பிசிசிஐ சார்பில் அணி வீரர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள உணவு முறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம்தான்! இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் இவைதான் என பிசிசிஐ சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதில், மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவை உண்ண கூடாது எனவும் ஹலால் முறையில் வெட்டப்பட்ட அசைவ உணவுகளை மட்டுமே இந்திய அணி வீரர்கள் சாப்பிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது இந்திய அணி வீரர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தவிர்த்து கட்டாயம் செய்வதாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளானர். இதனால், ட்விட்டரில் #BCCI_Promotes_Halal என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றது.






டி20 உலலக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு சுமாராகவே இருந்தது. அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஃபிட்னெஸ் மற்றும் உணவு முறைகளில் சில மாற்றங்களை பிசிசிஐ கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: Case Against Suriya Jyothika: ஜெய்பீம் விவகாரம் - சூர்யா, ஜோதிகா உள்பட படக்குழு மீது வன்னியர் சங்கம் வழக்கு


இந்து மற்றும் சீக்கிய முறைப்படி, ஹலால் முறைப்படி வெட்டப்படும் அசைவ உணவுகளை எடுத்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுவே, இஸ்லாமிய முறைப்படி ஹலால் உணவுகளே எடுத்து கொள்ளப்படுகிறது. இதனால், இந்து முறைக்கு எதிராக இருக்கும் ஹலால் உணவு பழக்கத்தை பிசிசிஐ எப்படி அமல்படுத்தலாம் என ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.


இந்நிலையில், பிசிசிஐ சார்பில் இந்த உணவு முறை மாற்றம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டதா என்பது பற்றிய தகவல் இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும், நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு பிசிசிஐ சார்பில் இருந்து இன்னும் விளக்கம் ஏதும் தரப்படவில்லை.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண