நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயத்தில், அந்த படத்தில் இடம்பெற்ற காட்சியில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததற்கும், காலண்டரில் வன்னியர் சங்கம் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் வன்னியர்சங்கங்களும், பா.ம.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா உள்பட படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Case Against Suriya Jyothika: ஜெய்பீம் விவகாரம் - சூர்யா, ஜோதிகா உள்பட படக்குழு மீது வன்னியர் சங்கம் வழக்கு
சுகுமாறன் | 23 Nov 2021 11:14 AM (IST)
ஜெய்பீம் படத்திற்கு எதிராக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
ஜெய்பீம்_படத்தில்_நடிகர்_சூர்யா