அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ:
தமிழ் சினிமா ரசிகரகளால் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டவர் இயக்குனர் அட்லீ. பிற மொழி படங்களில் இருக்கும் காட்சிகளைத்தான் அட்லீ தன்னுடைய படங்களில் வைக்கிறார் என்ற விமர்சனம் இவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில்,இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜவான். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக தகவல் வெளியாகின. இதனிடையே பாலிவுட் உலகில் தன்னுடைய அறிமுக படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார் அட்லீ.
தற்போது இவரது இயக்கத்தில் பேபி ஜான் என்கிற இந்தி படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தான் உலகப்பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் கலந்து கொள்ள தன்னுடைய குடும்பத்தினருடன் அட்லி குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அட்லீயை பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் அன்புடன் வரவேற்ற வீடியோ ஒன்று வைரலானது.
வைரல் வீடியோ:
இந்நிலையில் தான் அட்லீயின் மற்றொரு வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.அதன்படி அம்பானி வீட்டு விழாவின்போது அட்லீயை பார்த்த கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி அவரை கட்டி அணைத்து வரவேற்ற வீடியோ தான் அது. அப்போது தோனி ஜவான் பட வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவருடன் சிறிது நேரம் உரையாடி இருக்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தோனியின் பட நிறுவனத்தை வைத்து அட்லீ ஒரு புதிய படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று கூறிவருகின்றனர். அதேபோல், சில நெட்டிசன்கள் அட்லீயின் இயக்கத்தில் எம்.எஸ்.தோனி நடித்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். நேற்று தோனி மற்றும் பிராவோ சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சூழலில் தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!