கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரராக வலம் வருபவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமாகியவர் மகேந்திர சிங் தோனி. இவர் தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிக்கெட் ஆடி வரும் இந்திய அணியின் போட்டிகளை நேரில் பார்த்து ரசித்து வருவதுடன், இந்திய வீரர்களையும் நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.




இந்த நிலையில், ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து போட்டியின்போது மைதானத்தில் இருந்து தோனி வெளியே வந்தார். அவரைக்கண்ட இந்தியர்கள் அவரை போட்டோ எடுக்கவும், அவருடன் செல்பி எடுக்கவும், அவரை வீடியோ எடுக்கவும் சுற்றி வளைத்தனர். ஆனால், தோனி விறுவிறுவென்று நடந்து சென்றபோது அவரைச் சுற்றியே ரசிகர்களும் தங்களது செல்போன்களுடன் ஓடினர்.






இதனால், தோனியின் பாதுகாவலர்கள் இருவர் தோனியின் இருபுறமும் பாதுகாப்பாக சென்று அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த வீடியா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியை சுற்றிக்கொண்டு இந்தியர்கள் செல்பி எடுக்கவும், வீடியோ எடுக்கவும் ஓடியதை அங்கிருந்த வெளிநாட்டவர்கள வினோதமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்தனர்.   




மகேந்திர சிங் தோனி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டியின்போது இந்திய வீரர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கிய புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகியது.  மேலும், ஓவலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை கண்டுகளித்த தோனி போட்டியை காண வந்திருந்த பிரபல நடிகர் சயிப் அலிகான், பிரபல வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கிரினீட்ஜ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.  இந்திய அணிக்காக டி20 உலககோப்பை, 50 ஓவர் உலககோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என்று மூன்று உலககோப்பைகளை வாங்கித்தந்த தோனி, கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார். கடந்த சீசனில் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினாலும், ஜடேஜா மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனியிடமே ஒப்படைத்தார். அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாகவே தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் படிக்க : "பெட்ரோல் இல்ல, கிரவுண்டுக்கு போகல" பெட்ரோல் பங்கில் காத்துக்கிடக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் 


மேலும் படிக்க : Virat Kohli : அந்த மனசுதான் சார்..! 'கடந்துபோகும் எல்லாம்’ : ஆறுதல் சொன்ன பாகிஸ்தான் கேப்டனுக்கு நன்றிசொன்ன கோலி..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண