இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆட்சியாளர்களின் அரியணையைப் பறித்து வருகிறது. மக்கள் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வரும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல மாதங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் முடிவுக்கு வராமல் நீடித்த நிலையில் போராட்டம் முற்றியதில், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், வீட்டை அடித்து நொறுக்கினர்.
ஆசியக் கோப்பை
நடப்பு ஆண்டு ஆகஸ்டில் ஆசிய கோப்பை 2022 போட்டிகளை இலங்கை நடத்த உள்ளது. ஆனால், அந்நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையில் சராசரியாக தினசரி 10 சதவீதம் மக்களே எரிபொருள் பெற முடிகிற சூழல் காணப்படுகிறது.
எரிபொருள் இல்லை
"கிளப் கிரிக்கெட் சீசன் இருப்பதால், நாங்கள் கொழும்பில் பயிற்சிக்காக வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் நான் கடந்த இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் நின்றேன். எனக்கு எரிபொருள் கிடைக்கவில்லை. தற்போதுதான் கிடைத்தது. 10,000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளேன். அது 2 அல்லது 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று நினைக்கிறேன்", எனத் தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பையை நடத்த முடியுமா?
ஆசியக்கோப்பை தொடருக்கு தயாராக உள்ளீர்களா என்று கேட்ட கேள்விக்கு, "கண்டிப்பாக தயாராக உள்ளோம். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் அருமையான தொடர் நடந்து முடிந்தது. கிரிக்கெட் தொடர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அந்த நேரத்தில் எங்களுக்கு எல்லா வசதிகளும் செய்துத்தரப் படுகிறது. ஆனால் பொதுமக்கள் எரிபொருள் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்." என்று தெரிவித்தார்.
புதிய அரசு சீர்செய்யுமா?
தற்போது அமைந்திருக்கும் புதிய அரசு இந்த பிரச்சனைகளை சரி செய்யும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு, "இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை, சரியான இடங்களில் சரியானவர்களை தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். விரைவில் மக்கள் அதனை செய்யவேண்டும். சரியான ஒருவர் அந்த இடத்தில் மக்களால் தேர்வாகி வர வேண்டும். அப்போதுதான் அவர் மக்களுக்கு தேவையானதை செய்வார்.
இந்தியா உதவி
மேலும் அவர் இந்தியா தங்களுக்கு சகோதர நாடு என்றும், அவர்கள் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்துகொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்