உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வருபவர் விராட்கோலி. சமீபகாலமாக அவுட் ஆப் பார்மால் ரன் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் 16 ரன்களில் ஆட்டமிழந்தபோது அவர் மீதான விமர்சனங்கள் மிகவும் கடுமையாக அதிகரித்தது.


இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் எல்லாம் விராட்கோலியை விமர்சித்தபோது, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்  விராட்கோலிக்கு ஆதரவாக டுவிட் செய்தார். விராட்கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, இதுவும் கடந்து போகும். வலிமையாக இருங்கள் என்று பதிவிட்டார்.






பாபர் அசாமின் செயலை பலரும் பாராட்டினர். இந்த நிலையில், பாபர் அசாமின் டுவிட்டிற்கு விராட்கோலி பதிலளித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாபர் அசாமின் டுவிட்டை டேக் செய்த நன்றி. தொடர்ந்து ஜொலிக்கவும், வளரவும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். விராட்கோலியின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.






பாபர் அசாமின் பேட்டிங் ஸ்டைலையும், அவரது அபார ஆட்டத்திறனையும் விராட்கோலியின் பேட்டிங் ஸ்டைலுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். விராட்கோலி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள பாபர் அசாம் தன்னுடைய டுவிட் குறித்து அளித்துள்ள விளக்கத்தில் ஒரு வீரராக தனக்கு அவுட் ஆப் பார்மை எவ்வாறு கடப்பது என்று தெரியும் என்றும், உங்களுக்கு உறுதுணை தேவை என்றும், விராட்கோலி மிகச்சிறந்த வீரர். அதனால் அவருக்கு ஆதரவை அளித்தேன் என்றும் கூறினார்.


இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விராட்கோலி நிச்சயம் மீண்டு வருவார் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண