இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் ஒரு பெரிய கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு தனிப்பட்ட வீரரை விட ஒரு நல்ல அணியின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
அதாவது ஏபி டி வில்லியர்ஸ் அந்த வீடியோவில், 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது குறித்து கூறியுள்ளார். அதாவது எம்.எஸ் தோனி உலகக்கோப்பையை வெல்லவில்லை இந்திய அணிதான் கோப்பையை வென்றது என கூறினார்.
2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எம்.எஸ் தோனி ஒரு வெற்றிகரமான சிக்ஸரை அடித்து இந்திய அணியை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியில் 91 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்ததால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இது இந்தியாவின் இரண்டாவது ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி. இந்த வெற்றிக்குப் பின்னர் ரசிகர்கள் தோனியின் கேப்டன்ஷிப்பை முக்கியமாகக் கருதுகின்றனர்.
ஏபி டிவிலியர்ஸ் அந்த வீடியோவில். “கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு, அது உலகக் கோப்பையை ஒரு வீரரால் வெல்ல முடியாது. ஆனால் சமூக வலைதளங்களில் பலர் தோனிதான் கோப்பையை வென்றதாக பதிவிடுவதை அடிக்கடி பார்க்கிறேன். எம்.எஸ் தோனி உலகக் கோப்பையை வெல்லவில்லை, இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது, அதை நினைவில் கொள்ளுங்கள். அதை மறந்துவிடாதீர்கள். 2019-இல் லார்ட்ஸ் மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ் கோப்பையை உயர்த்தவில்லை, அங்கு கோப்பையை வென்றது இங்கிலாந்து” என்று ஏபி டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை இந்தியா அணி
ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் அறிவித்தனர். ஆசியக் கோப்பை அணியைப் போலவே அணியும் உள்ளது, திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய நான்கு சீமர்களுடன் இந்தியா களமிறங்குகிறது, மேலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்