இந்தியா - இலங்கை போட்டி:


இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி சூர்யகுமார் தலைமையில் 3 டி20 போட்டியிலும், ரோஹித் ஷர்மா தலைமையில் 3 ஒரு நாள் போட்டியிலும் விளையாடுகிறது. அதன்படி டி20 போட்டியை பொறுத்தவரை 2 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.


கவுதம் கம்பீர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் இந்திய அணி விளையாடும் தொடர் இது என்பதால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இச்சூழலில் தான் தனக்கு தேவையான பயிற்சியாளர்களை கம்பீர் தேர்ந்தெடுத்தார். அதன்படி துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயரையும், நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரர் ரியான் டஸ்சேட்டையும் தேர்ந்தெடுத்தார். அதேபோல் பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கெலை அறிவித்தார்.


பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்கல் இணைவது எப்போது?


அதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் சீசனில் கடந்த 2023 ஆம் ஆண்டு லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்கல் இருந்தது தான். அப்போது லக்னோ அணியின் பயிற்சியாளராக கம்பீர் இருந்தார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் மோர்கல் இணையவில்லை.


இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் மோர்னே மோர்கெல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: Lakshya sen: இந்தியர்கள் அதிர்ச்சி..! ஒலிம்பிக்கில் நடந்த மோசம்? பேட்மிண்டன் வீரர் லக்க்ஷயா சென்னின் வெற்றியை நீக்கி அறிவிப்பு


மேலும் படிக்க:Paris 2024 Olympics: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசு..! பெட்டியில் இருப்பது என்ன தெரியுமா?