ஆசிய கண்டத்தில் உள்ள முக்கியமான கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஆசிய கோப்பை கிரக்கெட் தொடர் ஆசிய கண்டத்தில் பலசாலி என்பதை தீர்மானிக்கும் தொடராக அமைகிறது.


ஆசிய கோப்பையை நடத்தும் இந்தியா:


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்பதால் இந்த தொடர் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்ப உள்ளது. கடந்த ஆசிய கோப்பைத் தொடர் இலங்கையில் நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.


அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்த உள்ளது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 தொடராக நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக பங்கேற்கின்றனர். ஆறாவது அணி தகுதிச்சுற்று மூலமாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற உள்ளது.


டி20 ஓவர் வடிவத்தில் மோதல்:


இந்திய அணிக்காக 2023-2027ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் அட்டவணை அடுத்தடுத்து போட்டிகள் நிறைந்ததாகவே உள்ளது. இந்திய அணி 20 ஓவர் தொடர் ஒன்றில் அடுத்தாண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆட உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சாம்பியன்ஸ் டிராபியில் ஆட உள்ளது. பின்னர், ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளது.


ஐ.பி.எல். தொடருக்கு பிறகு வங்கதேசத் தொடர், அதன்பின்பு இங்கிலாந்து தொடர் என்று இந்தியாவின் அட்டவணையானது அடுத்தாண்டு அமைந்துள்ளது. இதனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா - பாகிஸ்தான் மோதல்:


நடப்பாண்டிற்கான மகளிர் ஆசிய கோப்பை தற்போது இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இரு நாட்டுத் தொடர்களில் மோதிக் கொள்ளாத இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடிக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2027ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் வங்கதேசத்தில் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணி இலங்கையில் நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.