தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பர்ப்போம்:
ஐஐசி உலகக் கோப்பை 2023 தொடரில் தன்னுடைய அசாத்திய திறமையால் மாற்று அணி வீரர்களை அலறவிட்டவர் முகமது ஷமி. அந்த வகையில் இந்த முறை இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 6 போட்டிகள் விளையாடிய ஷமி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு உலகக் கோப்பை 2023 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அதோடு சர்வதேச உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றவர் ஷமி.
காயத்தால் அவதிப்படும் ஷமி:
இச்சூழலில், முகமது ஷமிக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனிடையே, இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அதன்படி, 3 டி 20 போட்டிகள் , 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், தற்போது வரை 2 டி 20 போட்டிகள் முடிந்துள்ளது.
மேலும், இன்று (டிசம்பர் 14) 3 வது ஒரு டி 20 போட்டி நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதன்படி, இந்த தொடர் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது.
டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?
இச்சூழலில், இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை (டிசம்பர் 25) ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளது. கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், நவ்தீப் சைனி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தயாராக உள்ளனர். மேலும், முகமது ஷமி மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக, இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை அண்மையில் வெளியிட்ட பிசிசிஐ , ”முகமது ஷமி தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார், மேலும் அவரது உடல் தகுதியை பொறுத்து டெஸ்ட் தொடரில் விளையாடுவது அமையும்” என்று கூறியது கூறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Arjuna Award: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முகமது ஷமி? வெளியான முக்கிய தகவல்!
மேலும் படிக்க: AUS vs PAK: காசாவுக்கு ஆதரவாக ஷூவில் வாசகம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா!