ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14ம் தேதி (நாளை) முதல் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தம் ஃபாஸ்டஸ்ட் அவுட் ஃபீல்ட் பிட்ச் ஆடுகளத்திற்கு பெயர்போனது. இந்த நிலையில், இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக உஸ்மான் கவாஜா களமிறங்க இருக்கிறார். ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி தொடங்கும் முன்பே உஸ்மான் மீது சர்ச்சை எழுந்துள்ளது.


உஸ்மான் கவாஜா மீது என்ன சர்ச்சை..? 


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடங்குவதற்கு முன்பாக உஸ்மான் கவாஜா மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, ​​கேமராமேன் உஸ்மான் கவாஜாவின் ஷூவை கவனித்தபோது,  அதில் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் கொல்லப்பட்ட காஸாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது.


உஸ்மான் தனது காலணியில் "அனைவரின் வாழ்க்கை சமம்" என்று எழுதியுள்ளார். உஸ்மானின் காலணியில் எழுதப்பட்ட இந்த வாசகம் காசாவில் கொல்லப்பட்ட மற்றும் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பிற அப்பாவி மக்களுக்காக என்று கூறப்படுகிறது. 






உஸ்மான் கவாஜாவின் இந்த செயலை ஊடகங்கள் கவனித்து அதை சர்ச்சை கிரிக்கெட்யை கிளப்பிய நிலையில்,  ஆஸ்திரேலியா கிரிக்கெட் உஸ்மான் கவாஜாவின் இந்த செயலுக்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால் இதற்கு ஐசிசி சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “ கிரிக்கெட்டை தவிர வேறு எந்த ஒரு தனிப்பட்ட கருத்தையும் களத்திற்கு உள்ளே கொண்டு வரக்கூடாது” என்று கூறியுள்ளது.


உஸ்மான் கவாஜாவின் ஆதரவு பதிவு:


முன்னதாக, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சமூக ஊடகத்தில் ஒரு பதிவில் காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தார் என்பது கவனிக்கத்தக்கது. அவர் காயமடைந்த மகளுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார்.


அதன்பிறகு, உஸ்மான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது மகளின் படத்தைப் பகிர்ந்து, “ என் மகள் ஆயிஷாவுக்கு தோட்டத்தில் பூச்சி கடித்தால் ஒவ்வாமை ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் ஆயிஷாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இந்த மருத்துவமனையில் மின்சாரம், தண்ணீர் மற்றும் ஐஸ் சிகிச்சையுடன் அனைத்து நல்ல ஏற்பாடுகளையும் அவர் பெறுவதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 






ஆனால், சில குழந்தைகள் இதை விட மோசமான நிலையில் உள்ளனர். இந்த வசதிகள் அனைத்தையும் அவர்களால் பெற முடியவில்லை என்பதை நினைத்து என் இதயம் உடைந்து கண்ணீர் வருகிறது" என்று கூறியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உஸ்மான் அதே காலணிகளை அணிந்து களம் இறங்குவாரா? அல்லது அந்த வாசகத்தை தனது காலணியில் இருந்து துடைத்து விடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.