இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.


இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில்  உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.  இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி  வென்றுள்ளது.






வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி:


அதன்படி உள்நாட்டில் நடைபெற்ற மிக நீண்ட டெஸ்ட் தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது. அதாவது இந்திய கிரிக்கெட் அணி இதுவரை சொந்த மண்ணில் நடைபெற்ற நீண்ட டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து 17-வது முறை தொடரை வென்று சாதனை படைத்து இருக்கிறது. அதன்படி, உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி வெற்றியை சுவைத்து வருகிறதுஇந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி தான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 10 தொடர்களை கைப்பற்றியுள்ளது. அதேபோல், மூன்றாவது இடத்திலும் ஆஸ்திரேலிய அணி தான் இருக்கிறது. கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை அந்த அணி தங்கள் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 10 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


வீரர்கள் புகழாரம்:


இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த வெற்றிக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், " நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்த இந்தியா மீண்டும் போராடி வெற்றி பெற்றது. இது நமது வீரர்களின் குணத்தையும் மன வலிமையையும் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.





அதேபோல், விவிஎஸ் லட்சுமணன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"இது இந்திய அணிக்கு அருமையான வெற்றி" என்று கூறியுள்ளார். அதேபோல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உட்பட பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: IND vs ENG: 10 விக்கெட்டுகளையும் அள்ளிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்! இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் சாதனை!


மேலும் படிக்க: Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட் - துருவ் ஜூரல் பின்னணி தெரியுமா?