இந்திய கிரிக்கெட் அணியைச் சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் டி20 கேப்டன்சி பதிவியில் இருந்து விலகிய கோலி, இந்த ஆண்டு, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு டெஸ்ட் கேப்டன்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.


டி20 கேப்டன்சியில் இருந்து விலகியது தொடர்பாக, கோலி, கங்குலியின் கருத்துகள் வேறுபட்டிருந்தது. இதனால், தான் கூறிய கருத்துகளுக்கு விளக்கம் கேட்டு விராட் கோலிக்கு கங்குலி நோட்டீஸ் அனுப்ப இருந்ததாக் தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. 


இந்நிலையில், இந்திய அணி சுற்றி நடந்து வரும் பிரச்சனைகளுக்கு முன்னாள் இந்திய அணி வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்திருக்கிறார். ”இந்த பிரச்சனையை அவர்கள் பேசி தீர்த்திருக்க வேண்டும். போன் செய்து பேசி முடித்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு இந்திய அணியையும், நாட்டையும் முதன்மையாக கருதி இருக்க வேண்டும். சில நேரங்களில் சில விஷயங்கள் கிடைக்காமல் போகலாம். அப்போது கேப்டன்சி பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதில்லை. கோலி மிகச்சிறந்த வீரர். அவர் இன்னும் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் சேர்க்க வேண்டும்” என கருத்து தெரிவித்திருக்கிறார்.



மேலும் படிக்க: Republic Day 2022: வழக்கமாக அணியும் தலைப்பாகைக்கு ’நோ’... கவனம் பெற்ற பிரதமர் அணிந்திருந்த தொப்பி, துண்டில் என்ன ஸ்பெஷல்?


முன்னதாக, கடந்தாண்டே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன், இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்புகளில் இருந்து விராட் கோலி விலகியபோது ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர் நல்ல வெற்றி விகிதம் வைத்திருந்தபோதும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் தொடர் தோல்விக்கு பிறகு ஏற்பட்ட விமர்சனங்களால் அவரே டெஸ்ட் கேப்டன் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி நிர்வாகத்திற்கும், விராட்கோலிக்கும் இடையே கடுமையான விரிசல் விழுந்திருப்பதாக தகவல்கள் பரவிவருகிறது. 


இதனால், இந்திய அணியைச் சுற்றி வரும் கேப்டன்சி சர்ச்சைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் காட்டமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண