இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. 


முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடிய விராட் கோலி 87 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 89 ரன்கள், ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் தந்து வெளியேறினர். 


வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர், கேப்ரியல், கெமர் ரோச், வாரிக்கன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


மேலும் படிக்க - Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!


போட்டி சுருக்கம்: 


டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாளில் 84 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்தது. ரோஹித் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அணிக்கு ஓப்பன் செய்ய வந்தனர். இதன் போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 57 ரன்களுடன் வெளியேறினார். பெற்றார். ரோஹித் 143 பந்துகளை எதிர்கொண்டு 80 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக உள்ளே வந்த சுப்மன் கில் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அஜிங்க்யா ரஹானே 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே சதம் பார்ட்னர்ஷிப் இருந்தது. கோலி 161 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்களுடனும், ஜடேஜா 84 பந்துகளில் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் எடுத்தனர். கோலி மற்றும் ஜடேஜா இடையே 201 பந்துகளில் 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. 


வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 13 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். வாரிக்கன் 25 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். கேப்ரியல் 12 ஓவர்களில் 50 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். கெமர் ரோச் 13 ஓவர்களில் 64 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இவர்களைத் தவிர எந்த ஒரு பந்து வீச்சாளரும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.






கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வா இடையே நடந்த அரட்டை ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. 


உரையாடல் பின்வருமாறு: 


ஜோசுவா டா சில்வா: “விராட் கோலியின் பேட்டிங்கைப் பார்க்க வருவதாக என் அம்மா என்னிடம் கூறினார். இதை என்னால் நம்பவே முடியவில்லை.






ஜோசுவா டா சில்வா: "உங்கள் 100ஐ அடிங்கள் விராட், நீங்கள் சதம் அடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."


விராட் கோலி: "என் மைல்கற்களில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா?"


ஜோசுவா டா சில்வா: "எனக்குத் தெரியும், நீங்கள் சதம் அடிக்க வேண்டும், கடந்த 2012 நீங்கள் டபுள் செஞ்சுரி அடித்ததுபோல் அடிக்க வேண்டும் 


இன்றைய இரவு நடைபெறும் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் தனது 500வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த பெருமையை படைப்பார்.