ஐசிசியின் அடுத்த தலைவர்:
வரும் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே தான் ஐசிசி தலைவர் பதவியில் இருந்து வருகிறார். இச்சூழலில் தான் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஐசிசி தலைவருக்கான தேர்தலில் பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஐசிசி தலைவர் பதவிக்கு ஜெய் ஷா போட்டியிட விரும்பினால் அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு ஐசிசி தலைவராக அவர் பொறுப்பிற்கு வந்தால் அடுத்த மூன்று ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார். மேலும் வரும் 2018 ஆம் ஆண்டு வரை பிசிசிஐ தலைவராகவும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஜெய்ஷாவிற்கு வாய்ப்பு:
முன்னதாக கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா ஐ.சி.சி தேர்தலில் போட்டியிட்டால் பிசிசிஐ செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்படும். அண்மையில் இந்திய அணியின் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர், ஜெய் ஷாவின் பதவிக்காலத்தில் இந்தியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பிசிசிஐ எடுத்த நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: BCCI: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - ஒவ்வொரு வீரருக்கும் இத்தனை கோடிகளா? மொத்த லிஸ்ட் இதோ!
மேலும் படிக்க: Abhishek Sharma: ரசிகர்களே! அபிஷேக் சர்மா விளையாடுன பேட் யாரோடது தெரியுமா?