டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சூப்பர் 12 போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இம்முறை டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி போட்டிகளில் யுஏஇயில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையும் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் யுஏஇ ஐபிஎல் போட்டிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் உலகக் கோப்பை போட்டி செயல்பாடுகள் என்னென்ன? 

ஜஸ்பிரீத் பும்ரா:

2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பும்ராவின் வேகப்பந்து வீச்சு மற்றும் பந்துவீசும் முறை ஆகிய இரண்டும் அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு முகமது ஷமியின் காரணமாக பும்ரா இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அப்போது முதல் இந்திய அணியின் முக்கியமான பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக யார்க்கர் மற்றும் டெர்த் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மாறினார். அத்துடன் இந்திய அணி இக்கட்டான சூழல்களில் இருக்கும் போது இவர் வந்து விக்கெட் எடுத்து கொடுத்து அணியை காப்பாற்றுவார். இதுவரை 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 61 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 


ஐபிஎல் யுஏஇ கடைசி 5 போட்டிகள்: 

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி யுஏஇயில் நடைபெற்றது. அதில் கடைசி 5 போட்டிகள் பும்ராவின்  செயல்பாடுகள்: 

போட்டி 

மைதானம்

பந்துவீச்சு

ராயல் சேலஞ்சர்ஸ்

துபாய் 

3-36

பஞ்சாப் கிங்ஸ்

அபுதாபி 

2-24

டெல்லி கேபிடல்ஸ்

ஷார்ஜா

1-29

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஷார்ஜா

2-14

சன்ரைசர்ஸ் 

அபுதாபி

2-39

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வீரர் என்றால் அது பும்ரா மட்டும் தான். அவர் சிறப்பாக பந்துவீசி ஒரு சில போட்டிகள் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் ரன்களை கட்டுபடுத்தினார். அத்துடன் விக்கெட்களையும் எடுத்தார். இதனால் உலகக் கோப்பை தொடரிலும் இவர் இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்பட்டார். 

டி20 உலகக் கோப்பை:


டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது வரை விளையாடியுள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் ஒரளவு சிறப்பாக விளையாடிய ஒரே இந்திய வீரர் பும்ரா மட்டும் தான்.

 

போட்டி 

மைதானம்

பந்துவீச்சு 

பாகிஸ்தான்

துபாய் 

0-22

நியூசிலாந்து

துபாய்

2-19

 

முதல் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடக்கத்தில் இவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள சற்று தடுமாறினர். அதேபோல் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து போட்டியிலும் நியூசிலாந்து வீரர்கள் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர். எனினும் பும்ராவிற்கு பேட்ஸ்மேன்கள் மற்றும் சக பந்துவீச்சாளர்கள் கை கொடுக்கவில்லை. எனவே இந்திய அணி தோல்வியை தழுவும் சூழல் உருவானது. ஐபிஎல் தொடரை போல் டி20 உலகக் கோப்பையில் தன்னுடைய நல்ல பந்துவீச்சை பும்ரா தொடர்ந்து வருகிறார். 

மேலும் படிக்க: ரன் இல்லை... விக்கெட் இல்லை... எப்படி தேர்வானார் ஹர்திக் பாண்டியா? ஆராயும் ABP நாடு!