டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சூப்பர் 12 போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இம்முறை டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி போட்டிகளில் யுஏஇயில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையும் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் யுஏஇ ஐபிஎல் போட்டிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் உலகக் கோப்பை போட்டி செயல்பாடுகள் என்னென்ன?
ஹர்திக் பாண்டியா:
இந்திய கிரிக்கெட் அணியில் டி20 போட்டிகளில் 2016ஆம் ஆண்டு முதல் ஹர்திக் பாண்டியா களமிறங்கி வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். எதிரணியின் பந்துவீச்சை தனது அசாத்திய திறமையால் சிக்சர் மற்றும் பவுண்டரிகளுக்கு விளாசும் திறமை கொண்டவர். அத்துடன் தன்னுடைய மித வேகப்பந்து வீச்சின் மூலம் அணிக்கு கூடுதல் வலு சேர்ப்பவர் என்பதால் ஒரு நல்ல ஆல் ரவுண்டராக இவர் உருவெடுத்து வந்தார். ஆனால் சமீப காலங்களில் அவருக்கு ஏற்பட்ட இடுப்பு, கால் மற்றும் தோள்பட்டை காயம் அவரை பந்துவீச அனுமதிக்கவில்லை.
ஐபிஎல் யுஏஇ கடைசி 5 போட்டிகள்:
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி யுஏஇயில் நடைபெற்றது. அதில் கடைசி 5 போட்டிகள் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை. அவர் வெறும் பேட்டிங் மட்டுமே செய்தார்.
போட்டி |
மைதானம் |
ரன்கள் |
ராயல் சேலஞ்சர்ஸ் |
துபாய் |
3(6) |
பஞ்சாப் கிங்ஸ் |
அபுதாபி |
40(30) |
டெல்லி கேபிடல்ஸ் |
ஷார்ஜா |
17(18) |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
ஷார்ஜா |
5*(6) |
சன்ரைசர்ஸ் |
அபுதாபி |
10(8) |
டி20 உலகக் கோப்பை:
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது வரை விளையாடியுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா முதல் போட்டியில் பேட்டிங் மட்டும் செய்தார். அந்த போட்டியில் அவர் பந்துவீசாதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. முழு உடற்தகுதியுடன் இல்லாத போது எதற்காக அவரை வெறும் பேட்ஸ்மேனாக அணியில் எடுத்தார்கள் என்ற விமர்சனம் எழுந்தது.
போட்டி |
மைதானம் |
ரன்கள் |
பாகிஸ்தான் |
துபாய் |
11 (8) |
நியூசிலாந்து |
துபாய் |
23(24) |
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள் பந்துவீசினார். அதில் 17 ரன்கள் விட்டு கொடுத்து விக்கெட்டும் எதுவும் வீழ்த்தாமல் இருந்தார். அவர் பந்துவீசியது இந்திய அணிக்கு நல்ல விஷயம் என்றாலும் அவருடைய பேட்டிங் ஃபார்ம் சரியாக இல்லாததால் இந்திய அணிக்கு ஒரு நல்ல ஃபினிஷிசர் மிஸ் செய்யப்படுகிறார். அத்துடன் டெர்த் ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்தவும் இந்திய அணி திணறி வருகிறது. அதற்கு ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இஷான் கிஷான் தேர்வு சரியா? என்ன சொல்கிறது அவரது ரெக்கார்டு? ஆராயும் ABP நாடு!