தொடர் தோல்வி இல்லை என்றாலும், அடுத்தடுத்த தோல்வி இந்திய கிரிக்கெட் அணி மீதுகடுமையான விமர்சனத்தை கிளப்பியுள்ளது. டி20 உலகக்கோப்பையில் எண்ட்ரியான கத்துக்குட்டி அணிகளான நமீபியா உள்ளிட்ட நாடுகள் கூட வெற்றியை ருசித்துவிட்டன. ஆனால் இந்தியா இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியவில்லை. வரும் காலங்களில் இது மாறும் என்றாலும், இந்த தோல்விகள் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாததே! அதற்கு காரணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவிடம் உலகக்கோப்பையில் வெற்றி பெறாத பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியிருக்கிறது. கிட்டத்தட்ட பாகிஸ்தான் பெற்ற வெற்றியைப் போலவே நியூசிலாந்தும் குறைந்த விக்கெட்டில் வெற்றி பெற்றிருக்கிறது. இரு போட்டிகளிலுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே இந்தியா சறுக்கியிருக்கிறது. அது தான் அந்த அணி மீது எழுந்துள்ள விமர்சனத்திற்கு காரணம்.


இந்நிலையில் அணி தேர்வு குறித்து பரவலாக பல்வேறு கலவை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. கடைசியாக இந்திய அணியில் விளையாடிய, விளையாட தேர்வான வீரர்கள் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் எவ்வாறு விளையாடினார்கள்? அவர்களின் பெர்பாமன்ஸ் என்ன? எத்தனை ரன் எடுத்தார்கள்? அவர்களது ஸ்ட்ரைக் ரேட் என்ன? இப்படி அனைத்து தரவுகளையும் எடுத்து தனித்தனியாக சுயபரிசோதனை செய்கிறது ஏபிபி நாடு. அந்த வகையில் இஷான் கிஷான் பற்றி பார்ப்போம். 

இஷான் கிஷான்... முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் தோல்வியடைந்ததும், அனைவரும் சொன்ன வார்த்தை, ‛இஷான் கிஷானை ஏன்... சேர்க்கவில்லை... சூர்யா குமாரை ஏன் சேர்த்தார்கள்...’ என்பது தான். சரி... அடுத்த போட்டியில் இஷான் கிஷானை சேர்த்தார்கள். சேர்த்தார்கள் என்பதை விட ரோஹித் இடத்தை அவருக்கு வழங்கினார்கள். ஆனாலும் ரிசல்ட் என்னவானது... 8 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து எதிர்பார்ப்பை தகர்த்தெறிந்தார் இஷான் கிஷான். இதோ அவரது முந்தைய பங்களிப்புகள்...

 

 

தேதி ரன்கள் பந்துகள் ஸ்ட்ரைக் ரேட் முடிவு  
ஐபிஎல்          
அக்.8 84* 32 262.50 வெற்றி  
அக்.5 50* 25 200.00 வெற்றி  
அக்.2       தோல்வி அணியில் இல்லை
செப்.28       வெற்றி அணியில் இல்லை
செப்.26 9 12 75.00 தோல்வி  
T20 World Cup          
அக்.24       தோல்வி அணியில் இல்லை
அக்.31 4 8 50.00 தோல்வி  
           


இஷாந்த் கிஷாந்த் அதிரடி ஆட்டக்காரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஒரு போட்டியை வைத்து ஒரு வீரரை மதிப்பிட முடியாது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இங்கு திறமையை நிரூபிக்க நேரம் இல்லை. போட்டிகள் குறைவு. வெற்றிகள் அதிகம் தேவை. அப்படி பார்க்கும் ஒவ்வொருவர் பங்களிப்பும் அவசியம். அது இல்லை என்பது தான் இங்கு குறை.