ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 48 லீக் ஆட்டங்களை கொண்ட இந்த தொடரில் இதுவரை 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதன்படி, இன்று (அக்டோபர் 11) 9 வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. 


பவர்ப்ளேவில் அசத்தல்:


டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இச்சூழலில், நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடும் 2 வது லீக் போட்டி இது. இதனிடையே, இந்த 2 லீக் ஆட்டங்களில் தான் வீசிய பவர்பிளே ஓவர்களில் மட்டும் 34 பந்துகளை டாட் பந்துகளாக வீசி கலக்கி இருக்கிறார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்பிரித் பும்ரா.


அந்த வகையில் ,  கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிரட்டினர். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.


மெய்டன், விக்கெட்


அதில் 10 ஓவர்கள் வீசிய ரவீந்திர ஜடேஜா 2 ஓவர்கள் மெய்டனுடன்,  28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், குல்திப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதில் பும்ரா வீசிய 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.






பவர் பிளேயில் கலக்கிய பும்ரா:


அதேபோல் பவர் பிளே ஓவர்களிலும் பும்ரா கலக்கியிருக்கிறார். அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இந்திய அணியின் லீக் போட்டியில், அவர் வீசிய முதல் 4 ஓவர்களில்( 24 பந்துகள்), 16 பந்துகளை டாட் பந்துகளாக வீசியுள்ளார்.  அதில் 1 விக்கெட் எடுத்து 11 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.


இச்சூழலில், இன்று (அக்டோபர் 11) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா வீசிய பவர் பிளே ஓவர்களில் ( 24 பந்துகள்)  18 பந்துகள் டாட் பாந்துகளாக வீசியுள்ளார்.


அதில் ஒரு ஒயிடு வீசியுள்ளார். மேலும் 1 விக்கெட் எடுத்து 8 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தன்னுடைய பந்துவீச்சு திறமையை வெளிபடுத்தி வருவது ரசிகர்களிடன் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Sachin on Ashwin: "கடைசி வரை போராடுபவர் அஸ்வின்" புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்!


 


மேலும் படிக்க: IND Vs AFG Live Score: பவுண்டரி மழை.. இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்யும் ஆஃப்கானிஸ்தான்