IND Vs AFG Live Score: ரோகித் சதம், கோலி அரைசதம் - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ODI World Cup 2023, IND Vs AFG: இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 11 Oct 2023 09:02 PM
ரோகித் சதம், கோலி அரைசதம் - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

IND Vs AFG Live Score: இமாலய சிக்ஸர் விளாசிய ஸ்ரேயஸ்..

போட்டியின் 33 வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் 101 மீட்டர்கள் சிக்ஸர் விளாசியுள்ளார். 

IND Vs AFG Live Score: 33 ஓவர்களில் இந்தியா..

33 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: 250 ரன்களை எட்டிய இந்தியா..

இந்திய அணி 32.2 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: ரோகித் சர்மா அவுட்..

சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 131 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IND Vs AFG Live Score: 200 ரன்களைக் கடந்த இந்தியா..

சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி 24.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 201 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: 95 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி..

இந்திய அணி 28 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்தால் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 

IND Vs AFG Live Score: 125 ரன்கள் எட்டிய இந்தியா..

14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி  விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்துள்ளது. 

IND Vs AFG Live Score: 50 பந்துகளில் ரோகித் சர்மா..

50 பந்துகளை இதுவரை எதிர்கொண்டுள்ள ரோகித் சர்மா 87 ரன்கள் குவித்துள்ளார். 

IND Vs AFG Live Score: மிரட்டும் தொடக்க ஜோடி..

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்து வருகின்றனர். 

IND Vs AFG Live Score: ரன் குவிப்பில் இந்தியா..

12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: 10 ஓவர்கள் முடிவில்..

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: 9 ஓவர்கள் முடிவில்..

9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: ரோகித் சர்மா அரைசதம்..

30 பந்துகளில் ரோகித் சர்மா தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இவர் 7 பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 

IND Vs AFG Live Score: 50 ரன்களை நெருங்கிய இந்தியா...

இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: ரோகித் சர்மா விளாசிய சிக்ஸர்..

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் தனது முதல் சிக்ஸரை விளாசியுள்ளார். 

IND Vs AFG Live Score: 4 ஓவர்களில் இந்தியா..

4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: 273 ரன்கள் டார்கெட்.. களமிறங்கிய இந்தியா..

273 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

IND Vs AFG Live Score: 4 விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா..

இந்தியா சார்பில் பும்ரா 10 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

IND Vs AFG Live Score: 273 ரன்கள் டார்கெட்

ஆஃப்கான் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து  272 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் பும்ரா 10 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

IND Vs AFG Live Score: 260 ரன்களைக் கடந்த ஆஃப்கானிஸ்தான்..

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது பவுண்டரிகளை விரட்டி வருதால் அணியின் ஸ்க்க்ர் 250 ரன்களைக் கடந்துள்ளது. 48 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்..

போட்டியின் 45வது ஓவரில் பும்ரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது ஆஃப்கான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ரஷித் கான் உள்ளார். 

IND Vs AFG Live Score: ஹஸ்மதுல்லா அவுட்..

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹஸ்மதுல்லா தனது விக்கெட்டினை குல்தீப் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். 

IND Vs AFG Live Score: 225 ரன்களை எட்டிய ஆஃப்கானிஸ்தான்..

42.1 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

IND Vs AFG Live Score: 40 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான்..

40 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கான் அணியின் தற்போதைய ரன்ரேட் 5.28ஆக உள்ளது. 

IND Vs AFG Live Score: 39 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான்

39 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

IND Vs AFG Live Score: 200 ரன்களை எட்டிய ஆஃப்கானிஸ்தான்..

போட்டியின் 36.4 வது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: 200 ரன்களை நெருங்கும் ஆஃப்கான்..

36 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: பிரிந்த துல்லா கூட்டணி..

128 பந்தில் 121 ரன்கள் குவித்த அஸ்மதுல்லா மற்றும் ஹஸ்மதுல்லா கூட்டணி பிரிந்துள்ளது. இதில் அஸ்மதுல்லா 69 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். 

IND Vs AFG Live Score: அடுத்தடுத்து அரைசதம் விளாசிய துல்லா கூட்டணி

இந்தியாவுக்கு எதிராக அஸ்மதுல்லா மற்றும் ஹஸ்மதுல்லா கூட்டணி அடுத்தடுத்து அரைசதம் விளாசி மிரட்டலாக விளையாடி வருகின்றனர். 

IND Vs AFG Live Score: இந்தியாவுக்கு எதிராக அரைசதம்..

ஆஃப்கானிஸ்தான் அணியின் அஸ்மத் 62 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.  இந்த உலகக் கோப்பைத் தொடரில் இவர்தான் இந்தியாவுக்கு எதிராக முதல் அரைசதம் விளாசும் வீரர் ஆவார். 

IND Vs AFG Live Score: அரைசதத்தை நெருங்கும் அஸ்மத்..

ஆஃப்கானிஸ்தான் அணியின் அஸ்மத் தனது அரைசதத்தினை நெருங்கி வருகிறார். இவர் அரைசதம் எட்டும் நிலையில் இந்த தொடரில் இந்தியாவுக்கு  எதிராக அடிக்கப்படும் முதல் அரைசதம் ஆக பதிவாகும். 

IND Vs AFG Live Score: அஸ்வின் ஏன் போட்டியில் இல்லை - சுனில் கவாஸ்கர் கேள்வி..

இந்த போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படவில்லை. இது குறித்து, இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், அஸ்வின் என்ன தவறு செய்தார்? அவர் ஏன் ப்ளேயிங் லெவனில் இல்லை. அவரை பென்ச்சில் அமரவைப்பது அவரை மேலும் தீர்க்கமுடையவராகத்தான் மாற்றும் என தெரிவித்துள்ளார். 

IND Vs AFG Live Score: 150 ரன்களை நெருங்கும் ஆஃப்கானிஸ்தான்

சிறப்பாக சரிவில் இருந்து மீண்டு வரும் ஆஃப்கானிஸ்தான் அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: சீராக ரன்கள் குவிக்கும் ஆஃப்கான்..

28 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கான் அணியின் தற்போதைய ரன்ரேட்4.75 ஆக உள்ளது. 

IND Vs AFG Live Score: அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்..

போட்டியின் 25வது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் அஸ்மதுல்லா இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு மிரட்டியுள்ளார். 

IND Vs AFG Live Score: தொடரின் 100வது சிக்ஸர்..

13வது உலகக் கோப்பைத் தொடரின் 100வது சிக்ஸரை ஹஸ்மதுல்லா ஷாகிதி விளாசியுள்ளார். 

IND Vs AFG Live Score: 100 ரன்களை எட்டிய ஆஃப்கான்..

24 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: 18 ஓவர்களை நிறைவு செய்த போட்டி..

18 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND Vs AFG Live Score: பந்து வீச வந்த ஜடேஜா..

போட்டியின் 18வது ஓவரை ஜடேஜா வீசிவருகிறார். இந்த போட்டியில் அவருடைய முதல் ஓவர் ஆகும். 

IND Vs AFG Live Score: 16 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான்..

16 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: மூன்றாவது விக்கெட்டினை இழந்த ஆஃப்கான்..

ஆஃப்கானிஸ்தான் அணி தனது 3வது விக்கெட்டினை இழந்துள்ளது. ஆஃப்கான் அணியின் ரஹ்மத் ஷா தனது விக்கெட்டினை 16 ரன்கள் சேர்த்த நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்தில்  வெளியேறினார். 

IND Vs AFG Live Score: இரண்டாவது விக்கெட்டினை இழந்த ஆஃப்கானிஸ்தான்..

பொறுப்புடன் விளையாடி வந்த குர்பாஸ் தனது விக்கெட்டினை ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். இவர் 28 பந்தில் 21 ரன்கள் சேர்த்தார். 

IND Vs AFG Live Score: பவர்ப்ளேவில் ஆதிக்கம் செலுத்தும் பும்ரா..

இதுவரை இந்தியா விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் பும்ரா மொத்தம் 8 ஓவர்கள் வீசி அதில் 34 பந்துகள் டாட் பாந்துகள் வீசியுள்ளார். 

IND Vs AFG Live Score: 50 ரன்களை எட்டிய ஆஃப்கானிஸ்தான்..

10.2 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

IND Vs AFG Live Score: 10 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான்

ஆஃப்கானிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 48 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: போட்டியின் முதல் சிக்ஸர்..

போட்டியின் முதல் சிக்ஸரை குர்பாஸ் பறக்கவிட்டுள்ளார். 

IND Vs AFG Live Score: பவர் ப்ளேவின் கடைசி ஓவர்..

பவர்ப்ளே கடைசி ஓவரான 10வது ஓவரை ஷ்ர்துல் தாக்கூர் வீசி வருகிறார். 

IND Vs AFG Live Score: பந்து வீசும் பர்த் டே பாய்..

இந்திய அணியின் ஒன்பதாவது ஓவரை இன்று தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஹர்திக் பாண்டியா வீசினார். இவர் இந்த ஓவரில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 

IND Vs AFG Live Score: 8 ஓவர்கள் முடிந்தது..

8 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 37 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: முதல் விக்கெட்..

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் விக்கெட்டினை பும்ரா கைப்பற்றியுள்ளார். இப்ராஹிம் 28 பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

IND Vs AFG Live Score: சிதையும் சிராஜ்

3 ஓவர்கள் வீசியுள்ள சிராஜ் விக்கெட் கைப்பற்றாமல் 23 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். 

IND Vs AFG Live Score: அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய இப்ராஹிம்

போட்டியின் 4வது ஓவரில் இப்ராஹிம் முதல் மற்றும் மூன்றாவது பந்தில் பவுண்டரி விளாசி அதகளப்படுத்தியுள்ளார். இந்த ஓவரை சிராஜ் வீசி வருகிறார். 

IND Vs AFG Live Score: மூன்று ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான்..

மூன்று ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: இரண்டு ஓவர்கள் முடிவில்..

இரண்டு ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs AFG Live Score: தாக்குதலைத் தொடங்கிய பும்ரா

இந்திய அணியின் முதல் ஓவரை பும்ரா வீசுகிறார். 

IND Vs AFG Live Score: மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்..

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய அணிக்கு உற்சாகமூட்ட ரசிகர்கள் குழுமியுள்ளனர். 

IND Vs AFG Live Score: ஆப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்:

ஆப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்:


ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல்-ஹக் ஃபரூக்ஹல்ஹாக்,

IND Vs AFG Live Score: இந்திய அணி

இந்தியா பிளேயிங் லெவன்:


ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

IND Vs AFG Live Score: தொடங்கியது போட்டி.. களமிறங்கியது ஆஃப்கானிஸ்தான்..

டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு செய்ததால், இந்திய அணி பந்து வீசவுள்ளது. இரு அணி வீரர்களும் களத்தில் தேசிய கீதம் பாடுவதற்காக வந்துள்ளனர். 

IND Vs AFG Live Score: டாஸ் வென்றது ஆஃப்கானிஸ்தான்..

இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு. 

Background

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது மதியம் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 


விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பாக பேட்டிங் செய்ததால் இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வலுவான வெற்றிபெற்றது. குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி 2 மற்றும் 3 விக்கெட்களை வீழ்த்தியதாக, வலுவான ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 


ரோகித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ரன் அவுட் ஆகி வெளியே சென்றாலும், விராட் மற்றும் ராகுல் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தனர். 


மறுபுறம், ஆப்கானிஸ்தான் தனது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியை சந்தித்தது. எனவே, இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கும். 


இந்திய அணியில் மாற்றம் இருக்குமா..? 


ரவிசந்திரன் அஸ்வினை பெஞ்சில் வைத்திருப்பதன் மூலம் ஷர்துல் தாக்கூருக்கு இந்திய அணி வாய்ப்பளிக்கலாம். ஏனென்றால், இன்றைய போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளதால், இங்குள்ள ஆடுகளம் இந்தியாவின் முந்தைய ஆட்டத்தின் (சேப்பாக்கம்) ஆடுகளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.


சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டத்தில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. சுழற்பந்து வீச்சுக்கு உகந்த விக்கெட் காரணமாக இந்தியா இந்த உத்தியைக் கடைப்பிடித்தது. இப்போது டெல்லி ஆடுகளம் சேப்பாக்கத்தைப் போல சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இல்லாததால், ஸ்பின் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை முயற்சி செய்யலாம். அல்லது அஸ்வினுக்கு பதிலாக முகமது ஷமியும் விளையாட வைக்கலாம்.  


இரு அணிகளுக்கு இதுவரை நேருக்கு நேர்: 


ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதிலும், 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லாமல் போனது. 2014 ஆம் ஆண்டு மிர்பூரில் இரு அணிகளும் முதல்முறையாக சந்தித்தது. இதில், இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளன. அதிலும், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


போட்டிகளின் சுருக்கம் இங்கே:



  • IND (224/8) AFG (213) அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, ஜூன் 22, 2019

  • AFG (252/8) IND (252)  முடிவில்லாமல் போனது. செப் 25, 2018

  • IND (160/2) AFG (159) அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது, மார்ச் 05, 2014


கணிக்கப்பட்ட இந்திய அணி: 


ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்/ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.


கணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி: 


ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், நவீன் உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.