நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறியுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன். இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கண்ணீர் விட்ட காவ்யா மாறன்:


சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் சீசன் 17-ன் இறுதிப் போட்டி நேற்று (மே26) நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.


இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது கொல்கத்தா. வெற்றியைத் தொடர்ந்து அந்த அணியின் உரிமையாளர்களான ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா இருவரும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மிதந்தனர்.


அதேநேரம் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் கண்ணீருடன் கைதட்டிக்கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. 


ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்த சுவாரஸ்யம்:


இதனைத்தொடர்ந்து காவ்யா மாறன் அழுகையை மறைத்தபடி அவருடைய அணி வீரர்களை கைதட்டி வரவேற்றார். பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை ட்ரெஸ்ஸிங் ரூமில் சந்தித்த அவர் உத்வேகம் அளித்தார்.


இது தொடர்பான வீடியோவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது . அதில், "நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நான் இங்கு வந்து அதை உங்களிடம் சொல்ல வேண்டியிருந்தது. அதாவது நாம் டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தை நீங்கள் மாற்றி அமைத்துள்ளீர்கள்.


எல்லோரும் நம்மை  பற்றி பேசுகிறார்கள். விடுமுறை நாள் இன்று நடக்க வேண்டும், ஆனால் மிகவும் சிறப்பானது. நீங்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினீர்கள். அப்படி பார்க்காதீர்கள்.







 கடந்த ஆண்டு நாம் கடைசி இடத்தைப் பிடித்திருந்தாலும், உங்களிடம் இருந்த திறமையால் ரசிகர்கள் அனைவரும் அதிக எண்ணிக்கையில் நம்பக்கம் வந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். KKR வெற்றி பெற்றாலும், எல்லோரும் நம்மை பற்றி அதிகம் பேசுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “எல்லா நாளும் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனாலும் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என்று கூறியுள்ளார். காவ்யா மாறன் வீரர்களை உத்வேகப்படுத்தி பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க: T20 World Cup 2024: கதிகலங்கும் ஜாம்பவான்கள்! கற்றுக்கொடுக்குமா கத்துக்குட்டி அணிகள்? உலகக்கோப்பையில் நடக்குமா அதிசயம்?


மேலும் படிக்க: IPL 2024 Final: ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த பிசிசிஐ.. லட்சக்கணக்கான ரூபாய் வெகுமதி..!