ஐ.பி.எல். போட்டிகள் எப்போது..?
ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் மார்ச் மாதம் 3 முதல் 26 ஆம் தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. இரு போட்டிகளும் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. எனினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பைனல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறவுள்ளது. பிசிசிஐ, 10 அணிகள் கொண்ட போட்டிக்கான இறுதித் தேதியை முடிப்பதற்கு முன், வெளிநாட்டு வீரர்களின் இருப்பை ஆராய்ந்து வருகிறது.
பி.சி.சி.ஐ. திட்டம்:
மே மாதத்துக்கு ஐபிஎல் போட்டியை முடித்துவிட பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து அணி அயர்லாந்துடன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை விளையாடவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியையும் இங்கிலாந்து நடத்தவுள்ளது. இந்தப் போட்டி ஜூன் 16ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து டென்னிஸ் மைதானத்தில் நுழைய ரோஜர் பெடரருக்கு அனுமதி மறுப்பா? என்ன நடந்தது தெரியுமா?
பிசிசிஐ இன்னும் தேதிகளை முறைப்படுத்தவில்லை என்றாலும், பிப்ரவரி 2 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறவுள்ள 2023 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு மகளிர் ஐபிஎல் போட்டியைத் தொடங்கலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகளிர் ஐ.பி.எல்.
இதனிடையே, மகளிர் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023-2027 சீசன்களுக்கான ஊடக உரிமைகளை பெறுவதற்கான டெண்டரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளது.
மகளிர் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023-2027 சீசன்களுக்கான ஊடக உரிமைகளுக்கான டெண்டரில் பங்கேற்க ஊடக நிறுவனங்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளது.
ஒளிபரப்பு உரிமையை வாங்கும் நிறுவனம் இந்திய நிறுவனமாக இருந்தால், 5,90,000 ரூபாய் செலுத்த வேண்டும். வாங்கும் நிறுவனம் வெளிநாட்டில் இருந்தால், 5,00,000 ரூபாய்க்கு நிகரான தொகையை டாலரில் (USD) செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
023-2027 மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் சீசன்களுக்கான ஊடக உரிமைகளை டெண்டர் செயல்முறை மூலம் பெறுவதற்கு புகழ்பெற்ற நிறுவனங்களிடம் இருந்து ஐபிஎல் நிர்வாகக் குழு ஏலம் கோருகிறது என்று என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.