மகளிர் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023-2027 சீசன்களுக்கான ஊடக உரிமைகளுக்கான டெண்டரில் பங்கேற்க ஊடக நிறுவனங்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளது.


ஒளிபரப்பு உரிமையை வாங்கும் நிறுவனம் இந்திய நிறுவனமாக இருந்தால், 5,90,000 ரூபாய் செலுத்த வேண்டும். வாங்கும் நிறுவனம் வெளிநாட்டில் இருந்தால், 5,00,000 ரூபாய்க்கு நிகரான தொகையை டாலரில் (USD) செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2023-2027 மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் சீசன்களுக்கான ஊடக உரிமைகளை டெண்டர் செயல்முறை மூலம் பெறுவதற்கு புகழ்பெற்ற நிறுவனங்களிடம் இருந்து ஐபிஎல் நிர்வாகக் குழு ஏலம் கோருகிறது என்று என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





தகுதிகள், ஏலங்களைச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறை, முன்மொழியப்பட்ட ஊடக உரிமை பேக்கேஜ்கள் மற்றும் கடமைகள் போன்றவை உட்பட டெண்டர் செயல்முறையை நிர்வகிக்கும் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் 'டெண்டருக்கான அழைப்பில்' ("ITT") உள்ளன. டிசம்பர் 31, 2022 வரை ITT வாங்குவதற்கு கிடைக்கும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இங்கிலாந்து டென்னிஸ் மைதானத்தில் நுழைய ரோஜர் பெடரருக்கு அனுமதி மறுப்பா? என்ன நடந்தது தெரியுமா?


இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகளிர் ஐபிஎல் தொடங்குவதை பிசிசிஐ உறுதிப்படுத்தியது. 22 போட்டிகள் கொண்ட இந்தப் போட்டியானது, விளையாடும் லெவன் அணியில் அதிகபட்சமாக ஐந்து வெளிநாட்டு வீராங்கனைகளைக் கொண்டதாக இருக்கும்.