15 -வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக மண்ணில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான இந்திய அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜடேஜா காயம்
இந்தத் தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா போட்டியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். காயம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஓய்வெடுத்து வருகிறார். இவர் உலகக்கோப்பை போட்டிககளை மனதில் வைத்து சாகச செயல்களை செய்திருக்க வேண்டும், பொருப்பற்று செயல்பட்டுள்ளார் என்று பலர் விமர்சனம் செய்து வந்தாலும், ஃபீல்டிங் என்றால் ஜடேஜா சிறுத்தையாக சீறத்தான் செய்வார் அதனால்தானே அவர் ஜடேஜா என்று பலர் அவருக்கு ஆதரவும் அளித்தனர்.
ஜடேஜா ட்விட்டர் பதிவு
நேற்று (செப்டம்பர் 14), ஜடேஜா தனது காயம் குறித்து மற்றொரு செய்தியை வெளியிட்டார், சரியான நேரத்தில் குணமடைய கடுமையாக உழைத்து வருவதாகக் கூறினார். அதோடு அவர் ஊன்றுகோல் வைத்து நடக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். முழு உடற்தகுதியை நோக்கி மெதுவாக முன்னேற முயற்சிகள் சிறிது சிறிதாய் எடுத்து வருவதாக அவர் எழுதி இருந்தார். இருப்பினும், அவர் தனது உடற்தகுதி நிலைக்குத் திரும்ப எவ்வளவு மாதம் ஆகும் என்பதை காலம்தான் சொல்லும்.
உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்
ஜடேஜா ஊன்றுகோலில் நடப்பதை பார்த்து ரசிகர்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டனர். அவர் இந்திய அணியில் சிறந்த ஸ்ப்ரிண்டர்கள் மற்றும் பீல்டர்களில் ஒருவர். சீறிப்பாயும் அவரை அப்படிப் பார்த்த இந்திய ரசிகர்களின் இதயங்கள் இந்த புகைப்படத்தை பார்த்ததன் மூலம் உடைந்துள்ளன. ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் 'விரைவில் குணமடையுங்கள்' மற்றும் 'டி20 உலகக் கோப்பை 2022 இல் உங்களை மிஸ் செய்கிறோம்' என்றெல்லாம்கருத்து தெரிவித்தனர்.
ஜடேஜாவின் இடம் யாருக்கு?
இந்திய ஆல்ரவுண்டராக வலம் வரும் ரவீந்திர ஜடேஜா இந்த ஆண்டு ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி, எட்டு இன்னிங்ஸ்களில் 50.25 சராசரியில் 201 ரன்கள் எடுத்து ஒரு பேட்ஸ்மேனாக அசத்தியுள்ளார். டி20 போட்டிகளில் இந்த ஆண்டு அவரது சிறந்த தனிநபர் ஸ்கோர் 46 நாட் அவுட் ஆகும். இது தவிர, அவர் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், ஐந்து இன்னிங்ஸ்களில் 82.00 சராசரியில் 328 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல் டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்களையும் அடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக அவர் அடித்த 175 நாட் அவுட், அவரது சிறந்த ஸ்கோர் ஆகும். அவர் டெஸ்டில் 5/41 என்ற சிறந்த பவுலிங் ஃபிகருடன் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்திய அணியின் தவிர்க்க முடியாத போட்டியாளராக இருந்த ஜடேஜா உலகக்கோப்பையை மிஸ் செய்வது அனைவருக்கும் வருத்தம்தான் என்கிறார்கள். இவருக்கு பதிலாக இவரைப்போலவே இடது கை பேட்ஸ்மேனும் ஸ்பின் பவுலருமான அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கும் பல பவுண்டரிகளை விளாசும் திறமை உண்டு என்பதால் பிசிசிஐ அவரது வெளிப்பாட்டை எதிர்நோக்கி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்