தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும்தான். குறுகிய காலம் மட்டுமே அரசியல்வாதியாக இருந்தாலும் கூட அசைக்க முடியாத ஆளுமையாக ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு எதிர்கட்சி தலைவராகவே இருந்தார். விஜய்காந்த்திற்கு திரை உலகத்தில் ஏகப்பட்ட மரியாதைகள் இருக்கின்றன. கோலிவுட்டில் விஜயகாந்த்திற்கு நெருக்கமானவர்களில் ஒருவர் ராதா ரவி . அவர் மேடை ஒன்றில் தனக்கும் விஜயகாந்திற்கும் இடையே இருக்கும் நட்பு பற்றி பகிர்ந்தார் . மேலும் அவரின் குணம் எப்படியானது என்பதையும் எமோஷ்னலாக ஷேர் செய்திருந்தார்.





அதில் "நான், விஜயகாந்த் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு வந்தவர்கள் . எனக்காக என் அப்பா இருந்தாரு. ஆனால் நான் நடிக்க வந்து 8  ஆண்டுகளுக்கு பிறகுதான் என் அப்பா எம்.ஆர்.ராதா என்பதே பலருக்கு தெரிய வரும் . தண்ணீர் தண்ணீர் திரைப்படத்திற்கு பிறகுதான் என்னை பலருக்கும் தெரியும் .என் அப்பா எப்போதுமே சொல்லுவாரு நன்றிக்கெட்ட உலகமடா சினிமான்னு . விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாம இருக்காரு , அவருக்கு உதவி செய்யனும் . புரட்சி தலைவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் அவர் நடித்த படங்களை போட்டுக்காட்டிதான் அதிலிருந்து மீண்டார். அதே போல விஜயகாந்திடம் என்னையெல்லாம் பேச விட்டா நானெல்லாம் ஒரு நாள் முழுக்க பேசி பேசி அவனை பேச வைத்துவிடுவேன் .







 அப்படி செய்தால் நடந்து வந்து நாட்டை ஆளும் சக்தி வரும் அவனுக்கு. விஜயகாந்த் சாதாரணமான ஆள் இல்லை. நடிகர் திலகம் உயிரிழந்த போது, அவரது அனைத்து இறுதி சடங்குகளையும் நடிகர் சங்கம்தான் செய்யும் என கூறியவர் விஜயகாந்த்தான் . மறக்க முடியுமா ! எந்த ஷூட்டிங்காக இருந்தாலும் .. குறிப்பா விஜயகாந்த் படம் என்றாலே பாதுகாப்பு இருக்கும். ஏன்னா விஜயகாந்த் இருக்கான். இப்போ இருக்குறதெல்லாம் சொன்னா தப்பா போயிடும். அவன் கேரோவேன்ல கூட உட்கார மாட்டான். மரத்தடியில் உட்காந்திருப்பான். மகான் அவன்“ என்றார் ராதா ரவி.