அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்துள்ளார். 


”மிகப் பெரிய பெருமை”:


எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகாவையும் பிரதிநிதித்துவப்படுத்தியல்,  எனக்கு மிகப் பெரிய பெருமை. அனைத்து நல்ல விஷயங்களும் ஒருகட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அனைத்து வகையான  கிரிக்கெட்டி போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.






சாதனையில் உத்தப்பா:


முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு,இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய உத்தப்பா, துவக்க போட்டிகளிலேயே 86 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அப்போது, முதல் போட்டிகளிலேயே அதிக ரன்கள் எடுத்த அறிமுக வீரர் என்ன்னும் சாதனையை படைத்தார்.


2007-ஆம் ஆண்டு டி20  உலக கோப்பை தொடரில் இந்தியா வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். 2014-15 ஆம் ஆண்டிற்கான ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.


கடந்த ஜூலை 14-ம் தேதி ராபின் உத்தப்பா மற்றும் அவரது மனைவி ஷீத்தல் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதை மகிழ்ச்சியுடன் உத்தப்பா அறிவித்தார்.


இந்நிலையில் ஓய்வு அறிவித்துள்ள உத்தப்பா, தனது குடும்பத்தினருடன் நேரத்தை கழிக்கப் போவதாகவும், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க போவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், எனது நாட்டுக்காக விளையாடியது மிகப் பெரிய பெருமை. எனது கர்நாடக மாநிலத்தை பிரதிநிதித்துவப் படுத்தியதில் மகிழ்ச்சி. இத்தருணத்தில் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


மேலும் என்னுடன் விளையாடி சக போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், உடற்பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 


இனி வரும் காலங்களில், எனது வாழ்க்கியின் புதிய அத்தியாயத்தை தொடங்க போகிறேன், எனது குடும்பத்துடன் புது வாழ்க்கையை தொடங்க பொகிறேன் என உத்தப்பா தெரிவித்துள்ளார்.