இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், இந்திய அணி தற்போது டி20 போட்டித் தொடரில் ஆடி வருகிறது. டி20 போட்டித் தொடரில் இந்தியா முதல் போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணியத்த 164 ரன்கள் இலக்கை இந்திய அணி 19வது ஓவரிலே எட்டிப்பிடித்தது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் 5 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 11 ரன் எடுத்து ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார்.




11 ரன்களில் ரிட்டையர்ட் ஹர்ட்டானாலும் ரோகித்சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்தார். இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்த போது டி20 போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித்சர்மா நேற்று படைத்தார். இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரோகித்சர்மா டி20 போட்டிகளில் 60 சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார்.


இதற்கு முன்பு இந்திய கேப்டனாக பொறுப்பு வகித்த விராட்கோலி 59 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் அடித்த சிக்ஸர் மூலம் ரோகித்சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி 34 சிக்ஸர்களுடன் உள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா அபார வெற்றி பெற்றது.




இந்திய கேப்டன் ரோகித்சர்மா முதல் டி20 போட்டியில் சர்வதேச அளவில் டி20 போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதற்கு முந்தைய வாரம் மார்டின் கப்தில் ரோகித்சர்மாவை முந்தினார். அவரை மீண்டும் பின்னுக்குத் தள்ளி ரோகித்சர்மா முதலிடம் பிடித்தார்.    


மேலும் படிக்க : Ind vs WI, 3rd T20: சீறிப்பாய்ந்த சூர்யா... ஸ்விங்கில் பின்னிய புவி... இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!


மேலும் படிக்க : ஈடன் கார்டனில் மீண்டும் இந்தியா சார்பில் களமிறங்கும் கங்குலி மற்றும் ஷேவாக்; மரண வெய்ட்டிங்கில் கிரிக்கெட் ரசிகர்கள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண