Legends League Cricket: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணிக்காக அதிரடி ஆட்டக்காரர்கள் கங்குலி, ஷேவாக் ஆகியோர் களமிறங்கவுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். 


2020 தொடக்கதில் இருந்து கிரிக்கெட் உலகமும் கொரோனாவால் முடங்கிக் கிடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியைத் தவிர அனைத்து வீரர்களையும் ஒரேசேர பார்ப்பது என்பது இயலாத காரியமாகவே இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல், இனி நடக்கவுள்ள ஆசிய கோப்பை போட்டி, உலகக்கோப்பை மற்றும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. 


இந்தியாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடக்கவுள்ள லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் உட்பட மொத்தம் ஆறு மைதானங்களில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, டெல்லி, ராஜ்கோட், லக்னோ, ஜோத்பூர் மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 


மொத்தம் மூன்று அணிகள் பங்கேற்கும் இந்த லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வீரர்கள் ஒரு அணியிலும், பாகிஸ்தான், இலங்கை, வங்களாதேசம் அணி வீரர்கள் ஒரு அணியிலும், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியுசிலாந்து அணி வீரர்கள் ஒரு அணியிலும் களமிறங்க உள்ளனர். அதாவது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் இந்திய மகாராஜ்ஸ் அணியில் களமிறங்க உள்ளனர். பாகிஸ்தான், இலங்கை, வங்களதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னாள் முன்னணி வீரர்கள் இணைந்து ஆசியா லைன்ஸ் என்ற அணியில் விளையாட உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியுசிலாந்து அணிகளின் முன்னாள் வீரர்கள் வோர்ல்ட் கெயிண்ட்ஸ் என்ற அணியிலும் இணைந்து விளையாட உள்ளனர். 


90 மற்றும் 2000களில் கிரிக்கெட் உலகினை கட்டி ஆண்ட உலகின் முன்னனி ஜாம்பவான்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட உள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண