பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள வீரர்கள் இப்போதே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த காலத்தில் இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கங்களை வென்று கொடுத்த வீரர்கள் எத்தனை பேர் இந்த முறை நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கிறார்கள் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்


நீரஜ் சோப்ரா:


இந்தியாவின் பிரகாசமான பதக்க வாய்ப்பிற்கு உத்திரவாதமாக இருக்கும் நிலையான நீரஜ் சோப்ரா தான். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தொடரில்  டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதன்படி அவர் வென்ற முதல் ஒலிம்பிக் பதக்கம் இது தான். அதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீரர் ஆனார். அவர் தங்கம் வென்றது அதை மேலும் சிறப்பு செய்தது. இச்சூழலில் தான் இந்த முறை நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


மீராபாய் சனு:


கடந்த முறை நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் முதல் நாளே வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை தேடித்தந்தவர் மீராபாய் சானு. 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் பதக்கம் வென்றார். சமீபத்தில் காயமடைந்த இவர் தற்போது குணமாகி பாரீஸ் ஒலிம்பிக் தொடரை எதிர் நோக்கி காத்திருக்கிறார். 


பி.வி.சிந்து:


ஒலிம்பிக் தொடரில் தனி நபர் அதிக பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருப்பவர் பிவி சிந்து. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற சிந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை தவற விட்டார். அதே நேரம் வெண்கலப்பதக்கம் வென்ற இவர் அதேமுனைப்புடன் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க உள்ளார்.


லோவ்லினா போர்கோஹைன்:


டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் லோவ்லினா போர்கோஹைன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இச்சூழலில் தான் பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களம் காண இருக்கிறார். இந்த முறை ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் இந்தியாவிற்காக தங்கப்பதங்களை வென்று நாடு திரும்ப வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.


மேலும் படிக்க: BCCI: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - ஒவ்வொரு வீரருக்கும் இத்தனை கோடிகளா? மொத்த லிஸ்ட் இதோ!


மேலும் படிக்க: Abhishek Sharma: ரசிகர்களே! அபிஷேக் சர்மா விளையாடுன பேட் யாரோடது தெரியுமா?